பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள் இருக்கும் 9-ம் பிளாக்கில் 5 சிறிய கட்டிடங்கள் உண்டு. அதை நாங்களே பிரித்துக் கொண்டு ஒரு கட்டிடத்தில் இருபது பேர் வீதம் தனிக்குடித்தனம் ஆரம்பித்து விட்டோம். முதல் ஒரு மாத காலம் நாங்கள் மனைவி, மக்களைப் பார்ப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. சர்க்கார் அதிகாரிகளுக்கே மிசாவின் சட்டதிட்டங்கள் சொல்லித்தரப்படவில்லை. ஆ ைகய ல் அவர்கள் எங்களைச் சந்திப்பதற்கு யாரையும் அனுமதிக்க வில்லை. பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக விதிமுறைகள் சிறைச்சாலைக்குத் தெரிய வந்தன. வாரம் ஒருமுறை மனைவி, மக்களைப் பார்க்கலாம் என்றும், மற்றவர்களைப் பார்க்க அனுமதி அளிக்க முடியாது என்றும் சிறை அதிகாரிகள் அறிவித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்குச் சிறை வாழ்க்கை மாமூல் ஆகிவிட்டது. -

வெளியே என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரிய வில்லை. கட்சி என்ன ஆயிற்று என்றும் எங்களுக்குப் புரியவில்லை. கலைஞர் தினசரி முரசொலி பத்திரிக்கையில் எழுதி வந்த கடிதம்தான் எங்களுக்கு ஊன்றுகோலாக இருந்தது.

தினசரி அதைப்படித்த பிறகுதான் சோர்வுகள் எங்களை விட்டு அகலும். தினசரி முரசொலியில் பார்த்து மற்ற வர்களுக்குப் படித்துக் காண் பித்து உணர்வுகள் மழுங்கிப் போகாமல் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோம்.

தமிழ்நாட்டில் உள் ள எல்லாச் சிறைச்சாலைகளிலும் தி. மு. க. நண்பர்கள் 'மிசா'க் கை தி க ளாக இருந்தார்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட நண்பர்கள் மிசாவின் தாக்குதலுக்கு ஆளானர்கள். யார் யார் எந்த எந்தச்சிறையில் இருக்கிருர்கள் என்பது இரண்டு மாதங்கள் கழிந்த பிறகுதான் ள்ங்களுக்குத் தெரிந்தது. இந்த இடைக்காலத்தில் இந்திரா காந்தி தென் மாவட்டங்களுக்கு வந்தார். கோவில்பட்டி அருகே ஒரு இடத்தில் பேசும்போது என்னுடைய சர்வாதிகாரத்தைப் பயன் Liu Gää (I will crush D. M. K. with all my Commands) நான் தி.மு.கவை அ ழி க் காம ல் விடமாட்டேன் என்று பயமுறுத்தினர். இந்த மிரட்டலை எல்லாப் பத்திரிக்கைகளும் பெரிதாக வெளியிட்டிருந்தன. இதைச்சிறைச் சாலையில் படித்த நண்பர்கள் சிலர் சிறிது அஞ்சினர்கள். ஜனதாக் கட்சியைச் சேர்ந்த மதுரை வக்கீல் விஸ்வநாத ஐயர் அவர்கள் நமக்கு இனி வி டு த லை யே இல்லை என்று பயமுறுத்திவிட்டார். இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல தொண்டர்களுக்கு அச்சம் குறைந்து இந்திராகாங்கிர்ஸ் ஆட்சி நிலைக்காது என்ற எண்ணம் பிறந்தது. - . . . . .

79.