பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்களுக்கும் சுமுகமான உறவு இருந்தது. நாங்களும் சட்டத் திற்குப் புற ம் பாக நடந்து கொள்ளவில்லை. அவர்களும் சலுகைகள் வழங்க முயற்சி செய்யவில்லை. இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தன. - - -

இதற்கிடையில் அமைச்சராக இ ரு ந் த செ. மாதவன் அவர்கள் சிறையில் இருந்த நண்பர்களின் இல்லங்களுக்குச் சென்று ஆறுதல்கள் கூறுவதற்குப் பதிலாக எங்கள் மனைவி மக்களிடத்தில் மிரட்டல்களை அள்ளி வீசிவந்ததாகச் செய்திகள் கிடைத்தன. முரசொலி படிக்கக்கூடாது என்றும் கலைஞரைப் பின்பற்றில்ை ஆயுள் முழுவதும் சிறைவாசம்தான் என்றும் அவர் அச்சுறுத்தி வந்திருக்கிருர். z

ஜூன் மாதம் ஒரு நாள் காலை 10 மணியளவில் எனதுதம்பி திருஞானம் என்னைப்பார்ப்பதற்காக வந்திருந்தான். வந்தவன் நல்ல தகவல்களைச் சொல்லவில்லை. நேற்று இரவு 10 மணி யளவில் என் தகப்பனர் திரு.சொக்கலிங்களுர் அவர்கள் இறந்து விட்டதாகச் சொன்னர். உடனடியாகப் பரோலில் வரக்கூடிய வாய்ப்பு இருக்காது என்று நினைத்தேன். என் தம்பியிடம்-நீ வீட்டிற்குப் போய்த் தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவர்களுக்கு இந்தத் தகவலை தொலைபேசிமூலம் தெரிவித்துவிடு என்று சொன்னேன். நான் சொன்னபடி அவன் சொல்லி யிருக்கிருன், நாங்கள் வியப்புறும் வகையில் அன்று மாலேயே நான் இரண்டு நாள் பரோலில் வெளிவர அனுமதி கிடைத்தது. நான் மாலை நான்கு மணிக்கு என்னுடைய தகப்பருைடைய சடலம் இருந்த கீழப்பூங்குடி என்ற கிராமத்திற்கு விரைந்து சென்றேன். ஊரில் ஒரே பரபரப்பு. \ , - போலிஸ் பந்தோபஸ்தேர்டு பிரேத ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். இரண்டு நாள் மதுரையில் தங்கிவிட்டு மூன்ருவது நாள் சிறைச்சாலைக்குப் போய்விட்டேன். என் சிறைவாசத்தில் மறக்க முடியாத சம்பவம் இது. - -

அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தா. கிருஷ்ண்ன் என்ன என் இல்லத்தில் சத்தித்து என்னிடம் து க்க ம் விசாரித்ாார். அப்போது அவர் சில முக்கிய விஷயங்களைச் சொன்னர். அவைகளில் மிக முக்கியமானது-தலைவர் கலைஞர் அவர்களின் து து வ ராக அவர் ஷேக் அப்துல்லாவைச் சந்தித்ததுதான்.

.:தமிழ்நாட்டில் 1976 ஜனவரி 31-ம் தேதி முதல் இன்று வரை நடந்துவரும் அரசாங்கக் கெடுபிடிகள், தொண்டர்கள் அனுபவித்து வரும் தொல்லைகள், வருமானவரிச் சோதனைகள்

81