பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவம்பர் 19ம் தேதி பிறந்தது. பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் வந்தது. அன்று மாலை நான்கு மணியளவில் சிறை அதிகாரி என்னைக் கூப்பிட்டு அனுப்பினர். இருவரும் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்தோம். r

மனதைக் கையில் பிடித்துக் கொள்ளுங்கள். நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம். இது என்னல் ஏற்பட்ட சிரமம் அல்ல. நான் ஏற்கெனவே த ங் க ளி ட ம் சொன்னபடி இது சி. ஐ. டிக்களின் தூண்டுதலால் வந்தது என்று சொன்னர். - -

நான்கலங்கவில்லை.

முதலில் உங்கள் வீட்டுக்குப் போன் செய்து உங்கள் மனைவி, மக்களை வரச் சொல்வோம்' என்றார்.

நான் ஒன்றும் பயப்படவில்லை. i 'நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்குத் தூக்குத் தண்டனையா வந்து விட்டது” என்று கேட்கத் தோன்றுகிறது என்றேன். அதெல்லாம் ஒன்றுமில்லை. உங்களை மட்டும் இந்தச் சிறைச்சாலையில் இருந்து வேலூர் சிறைச்சாலைக்கு மாற் றி இருக்கிருர்கள். இன்று இரவு 8 மணிக்கு உங்களை பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூலமாக அனுப்பிவிட வேண்டுமென்று உத்தரவு வந்திருக்கிறது' என்றார் சிறை அதிகாரி. o . .

அரை மணி நேரத்திற்குள்ளாக என் மனைவி, குழந்தைகள் தமயந்தி,பாமினி ஆகியோர் சிறைச்சாலைக்கு வந்துவிட்ட்ார்கள் அவர்களுக்கு விஷயத்தை சொன்ளுேம். என் மனைவி பிள்ளைகள் கண் கலங்கினர் இனி மேல் என்னைப் பார்க்க முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன் சூழ்நில அப்படி - - . . . .

சிறை அதிகாரிகளின் பேச்சிலிருந்து என க் கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு வேளை நான் திரும்பாமலேயே போய் விட்டால் என்ன செய்வது என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன்.

83