பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருந்தார். அவரைப் பார்த்து நான் வணக்கம் சொன்னேன். அ வ ரு ம் என்னை நிறுத்தி. உங்களை எங்கே கொண்டு போகிறார்கள் என்று கேட்டார். உடனே என்ன அழைத்துச் சென்ற அதிகாரிகளுக்கு அந்தப் பெரிய போலீஸ் அதிகாரியைத் தெரியாது. ஒரு அதிகாரி கோபம் அடைந்து அந்தப் போலீஸ் அதிகாரியைப் பார்த்து U மிசா கைதியோடு எப்படிப் பேசலாம் என்று அரட்டினார். உடனே அந்தப் பெரிய அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. you too i am D I.G." என்றார்.பதிலுக்கு உடனே என்னைக் கொண்டு சென்ற அதி காரி பயந்துபோய் அவருக்குச் சல்யூட் அடித்தார். y

இரவு இரண்டு மணிக்கு நாங்கள் விழுப்புரத்தில் இறங்கி விட்டோம். நாங்கள் அங்கிருந்து வண்டி மாறி வேலுருக்கும் போக வேண்டும். விழுப்புரம் பிளாட்பாரத்தில் வடக்குக் கோடியில் என்னைப்போல் ஒரு கைதியும், பத்துப் போலீசாரும் நின்று கொண்டு இருந்தார்கள். எனக்கு, துரத்தில் இருந்து பார்க்கும் பொழுது அவர்களை அடையாளம் தெரியவில்லை. நெருங்கிப் போய் பார்க்கவும் அனுமதி கிடைக்கவில்லை. அவர்களும் வேலூருக்குத்தான் வரக்கூடும் என்று யூகித்தேன். மூன்று மணிக்கு நாங்கள் காட்பாடி ரயிலில் ஏறினோம். காலை 9 மணிக்கு வேலூர் ஸ்டேஷனில் இறங்கிைேம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே ர யிலில் என்னைப் போல் அழைத்து வரப்பட்டவர் தாழை. மு.கருணநிதி தான்.அவரை திருச்சியிலிருந்து என்னைப்போல வேலூருக்கு மாற்றி இருக்கி றார்கள். இரண்டு பேரும் போலீசார் புடைசூழ தனித்தனிக் கும்பல்களாக நின்ருேம். ஒருவருக்கொருவர் பேசுவதற்கு அனு மதிகிடைக்கவில்லை எங்களைச் சிறைக்கு அழைத்துச் செல்வ தற்கு ஒரு போலீஸ் வாகனம் வந்தது. அதில் ஏறி உட்கார்ந்த பிறகுதான் நாங்கள் கட்டிப்பிடித்துக் கொண்டோம்.

காலை 11 மணிக்கு நாங்கள் சிறைவாச்லுக்குள் நுழைந்து விட்டோம். எங்களைச் சிறை கேட்கீப்பர் ஜட்டியோடு நிறுத் தினர். நான் சிவப்பு ஜட்டி அணிந்து இருந்தேன். வேலூர் சிறைச் சாலையில் முக்கியமான நக்ஸலைட்டுகள் அடைக்கப் பட்டு இருந்ததால் என்னைச்சிவப்பு ஜட்டியுடன் பார்த்த கேட் கீப்பர் நீங்கள் இருவரும் நக்ஸலைட்டுகளா? என்று கேட்டார். இல்லை நாங்கள் தி. மு. க. என்று சொன்ளுேம் ஜட்டியை ப்ார்த்து அப்படிக் கேட்ட்ேன்'-என்று வருத்தப்பட்டார்: 10 நிமிஷ்த்திற்குள்ளாக நானும், தாழை. மு. கருணநிதியும் சிறைவாசலில் நிற்கும் செய்தி சிறை முழுவதும் பரவிவிட்டது.

85