பக்கம்:பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்.pdf/3

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

சிவமயம்.

முகவுரை.


பண்டைக் காலத்தில் நந் தமிழ்நாட்டை நீதி தவிராது அரசாண்ட சோழ பாண்டியர்கட்கு மணிமுடி சூட்டுதல் ஆதிய பெருமையைப் பெற்றும், பிச்சைக் காரனுக்கு முத்து இடுதல் வெள்ளிக்கதவை அரசன் வாங்கிவிட அக்கணமே பொற்கதவு நாட்டுதல் செல்வப்பெருக்கத்தால் செலவிடஇடமின்றிக் கருங்கடலில் தங்கக்கட்டிகளைத்தள்ளுதல் ஆதிய செல்வத்தையுற்றும், கட்டுக்கடங்காக்காவிரிப் பெருக்கையும் அடைக்கக் கூடிய கணக்கற்ற பஞ்சுவியாபாரம் ஆதிய வியாபாரப் பெருக்கையடைந்தும், ஐந்துவயதுள்ள ஒருபெண்ணை அரசன் எடுத்துச்சென்றதற்காக அந்தப்பெண்ணின் சுற்றத்தார் மாத்திரம் அல்ல சமூக முழுமையும் உயிரையும் தியாகம் செய்து மானம் ஒன்றையே பிரதானமாகக் காப்பாற்றியும் வந்த நந் தனவணிகசமூகத்தில், சிலவருஷங்களாக உலகத்தில் எந்தப் பாகத்திலும் எந்த சமூகத்திலும் இல்லாத-நம் புண்ணிய நாட்டிற்கு, சிறப்பாக நந் தனவைசிய சமூகத்திற்கு சிறிதும் ஒவ்வாத-அறிஞர்கள் போற்றத் தகாத-மனிதர்கள் விரும்பத்தகாத பெற்றெடுத்து வளர்த்த பெண்மகவை மணமகனிடத்தில் “விலை வாங்கிக்கொண்டு விற்பது” என்ற ஒரு இழிந்த தொழிலைச் சிலர் செய்து வருதல் கண்டு, நந்தரும சமூகத்தினின்றும் இத்தொழிலை நீக்குதற்குன்னிப் பல துறைகளிலும் இடைவிடாது நஞ் சமூகத்தார் உழைத்துவருதல் உலகமறிந்த விஷயமே. எந்த விதத்திலாவது இதை நிறுத்திச் சமூகத்தைப் புனிதப்படுத்தவேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். பல விதத்திலும் இடித்துஇடித்து உரைத்தாலாவது மானக் குலத்திற் பிறந்ததை மறந்து ஈனத்தொழிலைக் கைக்கொண்ட சகோதரர்கள் திருந்துவார்கள் என்ற எண்ணங்கொண்டு செய்யுள் மூலமாகவும் கூறவேண்டு-