பக்கம்:பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


(இவை கo வேலவனை நோக்கிக் கூறியன.)

தலங்கடொறும் போய்ப்பணிந்து தவம்புரிந்து
       பலதீர்த்தம் தன்னி லாடி
நலங்களுயிர்க் களவின்றி நல்குநின்
       கடிமலரை நயந்து போற்றி
இலங்குமெழிற் பெண்மகவை ஈன்றுவளர்த்
       தெடுத்துமதி யின்றி, யையோ !
விலங்குகளைப் போல்விற்பார் வீழ்நரகென்?
       வேலவனே! விளம்பு வாயே. (கக)

கொலைகளவு கட்காமம் பொய்யெனுமைம்
       பெரும்பவம் குடிகொண் டார்க்கும்
கலைபயிலா மாந்தருக்கும் கண்ணியமில்
       லாமூடக் கயவர் கட்கும்
நலமொடுபெற் றெடுத்தப்பன் னாட்காத்த
       மங்கைதனை நலமொன் றின்றி
விலைகருதி விற்றிடுவார் வீழ்நரகென்?
       வேலவனே விளம்பு வயே. (௧௨)

பெற்றதாய் தந்தையர்கள் பிரியமுடன்
       பெற்றெடுத்த பெண்ணை நன்றாய்க்
கற்றவனும் நல்லொழுக்கங் காருண்யம்
       மிக்கானாம் கவினுள் ளானாம்
நற்றுணைவ னொருவற்கு நல்காது
       தம்வருவாய் நாடி, அந்தோ!
உற்றிடுவார் வீழ்நரகென்? வெற்றிபெறு
       வேலவனே! விளம்பு வாயே. (௧௩)