பக்கம்:பெண்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பெண்

னவா? முதலியாரும், ஐயரும், ஐயங்காரும், நாயுடுவும் பெண்கள் பெயருடன் என்ருவது பொருத்தப்பட்டுள்ள னவா? ஆடவர்தம் பெயருடன் தம் பெய்ரும் அமைய வேண்டுமென ஆசைப்பட்ட சில பெண்கள் வேண்டு மால்ை, ஆங்கில முறைப்படி தத்தம் பெயர்க்ளே அமைத் துக்கொள்ளலாம். ஆல்ை, அதுவும் இந்தக் கண் முடி நாகரிகத்தால் வந்ததுதானே? நம் தமிழ் நாட்டில் வாழும் பெண்கள் என்ருவது சாதிபற்றிய பெயர் பூண்டது. இல்லையே! இன்றைக்குத்தான் என்ன இந்த வேறு ப்ாட்டுக் கொள்கைகளே வளர்க்கும் ஆடவர் கூட்டுறவில், கொள்ளையில், கொண்டாட்டத்தில் மகளிர் பெரும் பங்கு கொள்வது இல்லையே ஆம் ; பெண்கள் உள்ளம் அனைத்தினும் மேம்பட்டது! உலகம் வாழத் தான் வாழ வேண்டும் என்ற உணர்வினை உடையது ; வையத்துக்கே தாய்மை உணர்ச்சியையும் இறைமை உணர்ச்சியையும் வாரி வழங்குவது. அந்த இறை உணர்ச்சியை உலகம் அறிய நாட்கள் பல் செல்லும். எல்லாரும் எத்தகைய வேறுபாடும் இன்றி, அனைவரும் ஒன்று, என்ற உணர் வில் மக்களே வாழ வைப்பது பெண் இனந்தான். எவ். வளவுதான் பிற்போக்கு நிலையிலே இருந்தாலும், பெண் இனம் இன்ற்ேல், மாநில வாழ்வு கெடும்; வரலாறு மங்கிப் போகும் வளமும் பிறவும் வற்றும். எல்லாரும் எல்லாமும் இன்பத் தனி வாழ்வில் இயங்க வேண்டுமாயின், பெண் இனத்தோடு எேன்றும் ஆணினம் பிரியாது-ஏன்வேறுபடாது வாழத்தான் வேண்டும். இதைத்தான் சமயத் தலைவர்கள் சத்திகள் உடலிலும், காவிலும், மார்பிலும் கடவgர்க்கு அடங்கியதாகக் கற்பனை செய் கின்றர்கள். ஆம், பெண் ணி ன ம் ஆணினத்தோடு உடலுக்கு உடலாய், உயிருக்கு உயிராய், உணர்வுக்கு உணர்வாய், உரையினுக்கு உரையாய், சொல்லிலும் செயலிலும் வேறுபாடற்ற உரிமை நிலையில் என்று ஒன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/105&oldid=600955" இலிருந்து மீள்விக்கப்பட்டது