பக்கம்:பெண்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலத்தே மங்கையர் நிலை ti

அந்த வேளையில், இதோ பெண்ணினம் போற்றும் பேரரசியார்-சேரன் தலைவியார் - வேண்மாள் என்னும் விருப்பிற்குரிய பெயரினர் பேசுகின்ருர். அவர் பேச்சு எவ்வளவு பொருத்தமாய் அமைகின்றது! கற்பிற்சிறந்த பாண்டிமா தேவியாரினும், கண்ணகிக்குக் கோயி லெடுக்கச் சொல்லுகின்ருரே! அவர் காட்டும் காரணம் எவ்வளவு பொருத்தமாய் அமைகின்றது! கணவைேடு அரசு கட்டிலில் வீழ்ந்திறந்த செல்வி சிறந்தவளாயினும் கம் நாடு நோக்கி வந்து, நமது மலையில் கணவனேடு விண்ணிழி விமானத்தில் ஏறிச் சென்ற கண்ணகிக்கே கோயில் எடுக்க வேண்டும்! என்று அந்த அரசியார் சொல்லும்போது அவையில் எ வ் வ ள வு ஆரவாரம்! அ வர் த ம் வாய்மொழிப்படிதானே செங்குட்டுவன் கண்ணகியின் கோயிலைச் சமைக்கின்ருன்! ஏதோ பெய ருக்கு மட்டும் அரசி என்றும் பட்டமகிஷி என்றும் இராமல், அரச காரியங்கள் அனைத்தினும் அரசனுக்குக் கைகொடுத்து, உற்றுழி உதவி, அமைச்சரின் மேலாக அறிவுரையும் ஆய்வுரையும் வழங்கி, அன்று தமிழ் நாட்டின் பெண் இனத்தின் பெருமையைப் போற்றிப் புரந்த அன்னையர் வழியிலேதான் நானும் வந்துள்ளேன்.

சங்க கால இயக்கியங்கள் இன்னும் எத்தனையோ அன்னையரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்து கின்றன! கரிகாலன் மகளாராகிய ஆதிமந்தியார் தம் கணவனே டு காவிரிக்கரையில் புனலாடிய பொழுது, புனல் வழி அவனே வெள்ளம் ஈர்த்துச் செல்லப் பெரிதும் வருந்தி, தாமும் கரை வழியே சென்று கடலருகே தம் காதற் கணவனே மீண்டும் பெற்றதும் நம் தமிழ் நாட்டு நிகழ்ச்சிகளுள் ஒன்ருகத்தானே அமைந்துள்ளது! நீரும் நெருப்புங்கூட மங்கையர் தம் வாய்மொழி கடவா நெறியில் அன்று இந் நாட்டில் பெண்மை வாழ்ந்து வந்தது. பெண்டிர்தம் ஏவல் கேட்க அனைவரும் முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/14&oldid=600864" இலிருந்து மீள்விக்கப்பட்டது