பக்கம்:பெண்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பெண்

கின்றனர். ஆல்ை, இன்றைய பெண்டிர் மற்றையோர் ஏவல் வழியேதானே வாழக் கடமைப்பட்டவராகின் றனர்? -

'இடைக்குலமாதர்க்கு அடைக்கலம் தந்தேன் !’ என்ற வா ய் .ெ மா ழி ைய த் தாய்மொழியெனக் கொண்டு, தன்னிடம் அடைக்கலமாக வைக்கப்பட்ட கணணகியை எவ்வளவு கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றினுள் மாதரி என்னும் அந்த மங்கை நல்லாள் கோவலனைப் பின்பற்றிக் கண்ணகியும் சென்ற பின் அடைக்கலப் பொருளே இழந்த அந்தப் பெரும் துன்பத்தாலேயே தானும் வருந்தியிறந்த அந்தப் பெருநிலைப் பெண்டிர் வாழ்ந்த தமிழ் நாடுதானே இது ? 'காமம் பெரிதே! களேஞரோ இலரே! என்று அன்றைய தமிழர் வாழவை எண்ணி எண்ணிப் பாடிய வெள்ளி வீதியார் போன்ற பெருகலப் பெண்மணிகள் நம் மனக் கண்முன் காட்சி அளிக்கின்ருர்களே ! குறமகள் இள வெயினியும், பேய்மகள் இளவெயினியும் பாடிய பாடல்கள் இன்றளவும் நலம் கெடாது வாழ்கின்றனவே! மலையமான் திருமுடிக்காரியையும், மலையமான் சோழிய வேதிை திருக் கண்ணனேயும், சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பாடிய பெரும் புலமைச் செல்வியரான மாருேக்கத்து நப்பசலையாருள்ளிட்டுச் சங்கச் செய்யுட்களில் தங்கி வாழும் பெண்டிர் எத்தனை பேர். ஒரு கண்ணகிக்காக-கணவனைப் பிரிந்து கடுங் துயருழந்த பெண்ணுக்காக-பேகன் மனைவிக்காகஎத்தனைப் புலவர் முன்வந்து அவரது துயரத்தை நீக்கி வைத்தனர்! கொடை வள்ளல்களுள் ஒருவனுய் இருந்துங் கூட, பேகன், கொண்ட மனைவியை விட்டுப் பிரிந்த ஒரு காரணத்தால், புலவர் அவனே எவ்வாறு வெறுத்து ஒதுக்குகின்றனர் புலவர்தம் பெருமுயற்சியாலன்ருே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/15&oldid=600865" இலிருந்து மீள்விக்கப்பட்டது