பக்கம்:பெண்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் துறவும்

யார் அவள் ? மாதவியா ? அவள் அருகில் அழகே திரண்டு உருவாகி உள்ள அந்த ஆரணங்கு யார் ? ஆம். மணிமேகலைதான். என்ன ! காவிரிப்பூம்பட்டினத்தே அழகின் சிகரமாய்த் திகழ்ந்த அந்தத் தெய்வத் திரு. மாதவியா இப்படிப் பொலிவிழந்து காண்கின்ருள்? அவள் மகள் இளமை ததும்பும் எழில் பெற்றிருந்தும் ஏன் இப்படித் துறவுக்கோலத்தில் காட்சி அளிக்கின்ருள்? ஆகா! கடற்கரைப்பாட்டு ஒன்று காரணமாக, தன்னே விட்டுப் பிரிந்த கோவலனை எண்ணி எண்ணி, மாதவி இவ்வாறு துறவுக் கோலத்தை மேற்கொண்டாள் போலும் ! அவள் போனல் போகட்டுமே ! இந்த இளஞ் செல்வி-அழகுத் தெய்வம்-மணிமேகலை-இவளே ஏன் இந்தத் துறவை மேற்கொள்ள் வற்புறுத்த வேண்டும் ? வண்டே அனையர் ஆடவர் என்பதைக் கண்ட காரணம் அல்லவா அத்தகைய அழகுச் செல்வியையும் துறவை மேற்கொள்ளச் செய்தது ? ஆல்ை, மற்ருென்றும் கண் முன் காட்சி அளிக்கின்றதே அதோ ஒரு புத்த பிட்சு ! அதோ அறவண அடிகள் ! தமிழ் நாட்டில் புத்த மதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/23&oldid=600873" இலிருந்து மீள்விக்கப்பட்டது