பக்கம்:பெண்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பெண்

நெறியினையும், பின்னர் இரண்டொரு நூற்ருண்டுகளுக் குள்ளே அவை ஏசப்பட்ட இழி நிலையையும் எண் ணு திருக்க முடியவில்லையே! என்செய்வது !

இதில் மற்றென்றை நினைத்தால்தான் மாளாத்துயர் உண்டாகின்றது : காதல் வாழ்வை வெறுத்த ஆடவர் தாம் - துறவியர்தாம் - பெண்களே வெறுத்தனர் என்ப தில்லையே! மணிமேகலை போன்ற செம்மனச் செல்வியர் கூடத்தானே அத்துறவியர் கூட்டத்தில் கூடியுள்ளனர் ! மாதவி தான் துறவுகொண்ட அந்தக் காரணத்தில்ை மற்றவரையும் பழிக்க வழி காணும் முறையில் மணி மேகலையைத் துறவுக்கோலத்துக்கு ஏன் இழுத்துச்செல்ல வேண்டும் ? அவளது இளமையுள்ளம் காதல் வாழ்வின நினைந்து நினைந்து எவ்வளவு கரைந்திருக்கும் ! சாத்தனர் அவள் உள்ளத்தை எவ்வளவு கட்டுப்பாட்டுடன் மறைக்க நினைத்த போதிலும், இரண்டோரிடங்களில் உள்ளம் தெளிவாகின்றதே ! மணிமேகலையே தன் உள்ளத்தைத் திறந்து காட்டுமுகத்தான் தன் மனம் அந்த அரச குமாரன் வழியேசென்றதாக அறிவதை அவரே கூறு கின்ருரே! அவன் இறந்ததும் அவள் கொள்ளும் வருத் தத்தை வேருெரு 'பாவை வந்தல்லவோ மாற்ற வேண்டி யுள்ளது ! சீ அவளது உள்ளத்தூய்மை அவளது காதல் வாழ்வில் சென்றிருந்தால் எவ்வளவு செம்மைப்பட் டிருக்கும் ! அவள் வாழ்வின்வழி உண்மையில் வெறுப்புக் கொண்டோ, அன்றிக் காமஞ்சான்ற கடைக்கோள் நிலையிலோ, துறவை மேற்கொண்டிருப்பின், அத்துறவு எவ்வளவு ஏற்றம் பெற்றிருக்கும் ! .

சாத்தனுர் காலம் தமிழ்நாட்டுக்கு ஒரு மாறுபடு கோணக் காலம் போலும் ! அறநெறி பேணிய அந்தணுள ராகிய போதி நீழற் புண்ணியர் காட்டிய சமய நெறி பரப்ப வந்த சாத்தனர், பெண் இனத்தைப் பழித்தது ஒரு புறம் இருந்தால், பிற சமயத்தவரைப் பழிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/31&oldid=600881" இலிருந்து மீள்விக்கப்பட்டது