பக்கம்:பெண்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் துறவும் 29

முறை அதனினும் மேம்பட்டுத் தெரிகின்றது. அதுவரை தமிழ் காட்டில் காண முடியாத ஒரு சமயவெறி அன்று நாட்டில் புகுத்தப்படுகிறது. எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைவழி வாழ்ந்த தமிழ் நாட்டு மக்கள் வாழ்வுப் பாதையில் சமய வேறுபாட்டுணர்ச்சியாகிய முள்ளின் விதைய்ைச் சாத்தனர் அறிந்தோ அறியாமலோ துரவி விட்டாரே! அவர் வித்திய விதையினில் முளைத்த பெருமுட்கள் இன்றளவும் தமிழ் நாட்டு மக்கள் வாழ்வில் அல்லலேயும், அவதியையும் வளர்த்துக்கொண்டுதானே வருகின்றன ! சமயக்கணக்கர் மதிவழி கூருது, உலகியல் கூறி, அனைவரும் ஒன்று; எல்லாச் சமயமும் ஒன்றே,’ என்று காட்டி வள்ளுவர் பிறந்த நாட்டிலேதான், சமயக் கணக்கர்தம் திறம் கேட்டு, அனைத்தும் தீயன என்று வெறுத்து, புத்தசமயத்தைப் போற்றி வளர்த்த கதை கூறப்படுகின்றது. இப்படிப் பெண்ணடிமையும், சமய வேற்றுமையும் அந்தக் காலத்தில் ஏனே அப்படிப் போற்றி வளர்க்கப்பட்டன! சாதாரண மக்கள் வழி அது வளர்ந்தது என்ருலும் கவலையில்லை; அறிவறிந்த பெரும் புலவர்எனப் பேசும் சாத்தனர் வழியே இக்கொடுமை கள் வேற்றுமையறியாத் தமிழ் மக்கள் வாழ்வில் கால் கொண்டன என்ருல், இதை என்னென்று சொல்வது ! காலத்தின் கோளாரு? அப்படியும் நினைக்கக்கூடவில்லை. அவர் காலத்தவரான இளங்கோவடிகள் சமணராயி ஆணும், பிற சமய நெறிகளை எப்படிப் போற்றி புரக்கின்ருர்! ஆகவே, வேறு கொடுமையாகத்தான் இருக்க முடியும். எப்படியோ அன்று துரவிய இருபெருங் கொடுமைகள் நாட்டில் இன்னும் நலிவுறுத்துகின்றன ! இன்றுதானே பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண் .ணடிமை தீர்ந்து வருதல் முயல் கொம்பே. என்று பேசக் கூடிய அளவில் மக்கள் முன் வந்துள்ளார்கள் ! அவர்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/32&oldid=600882" இலிருந்து மீள்விக்கப்பட்டது