பக்கம்:பெண்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையின் பெரும்புரட்சி 39.

தலைவர்கள் நாட்டில் உல்லாசப் பவனி வந்து உயர்ந்த செல்வ வாழ்க்கை வாழ. காரணம் அறியாது, கதி கலங்கி வேலை நிறுத்தம் செய்த தொழிலாளரைத் தாக்கும் இன்றைய அரசாங்கங்களைப் போன்று, அன்றைய பல்லவனும் அந்த நாவரசரையன்ருே கொடு மைப்படுத்துகின்ருன்! ஆல்ை, அந்த அம்மையாரின் புரட்சிக்கனல் வளர்கின்றதே எல்லாக் கொடுமைகளை யும் பொசுக்குகின்றதே! அரசனுமன்ருே புரட்சிக்காரய்ை மாறிவிடுகிருன்! சமணப் பாழிகளைக் கட்டிச் சமணத் துறவிகளைத் தெய்வமெனப் போற்றிச் சிறப்புச் செய்த அந்த மகேந்திரன் எங்கே? இதோ அதே சமண்பாழிகளே இடித்து, திலகவதியாரது புரட்சித்தீ அணையும் வகையில் ஆலயம் அமைக்கும் இந்தக் குணபரன் எங்கே! இதோ சேக்கிழார் அவன் புரட்சிச் செயலே எவ்வளவு அழகாக விளக்கின்ருர் !

வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்திலமண் பள்ளியொடு பாழிகளும் கூட இடித் துக்கொணர்ந்து குணபரவிச் சுரமெடுத்தான்."

என்பது அவர் மொழி. எத்தனை உயர்வான - மனத் திற்கும் எட்டாத - புரட்சி இது. இதற்கு அடிப்படை கோலியவர் யார் ? என் அருமைத் தமிழ் அன்னேயார் குலத்துதித்த செல்வியார் திலகவதியார் அல்லரோ!'

திலகவதியாரது மனத்திட்பமே தருமசேனரைச் சைவ சமயம் சாரச் செய்தது; அத்துடன் அவருக்கு உண்டான அல்லலேயும் நீக்கிற்று. பேரரசன் பல்லவன் மகேந்திரவர்மனேயே தன் சமயம் விட்டுச் சைவ சமயம் சார வைத்தது. நாட்டிலே ஒரு பெருஞ்சமயப் புரட் உண்டாக்கி, நான்கைந்து நூற்ருண்டுகளாகக் கால் கொண்டு ஆணை செலுத்திய ஒரு பெருஞ் சமயத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/42&oldid=600892" இலிருந்து மீள்விக்கப்பட்டது