பக்கம்:பெண்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையின் பெரும்புரட்சி 43

'வலம்வந்த மடவார்கள் நடமாட முழுவதிர மழைஎன் றஞ்சிச்

சிலமந்தி அலமந்து மரமேறி

முகில்பார்க்கும் திருவை யாறே.

என்பதும் சம்பந்தர் வாக்கு. இவை எவற்றைக் காட்டு கின்றன? அந்த மங்கை நல்லாரது மதிப்பையன்ருே விளக்குகின்றன?

இக்கலையில் மட்டுமன்றிச் சாதாரண வாழ்க்கைமுறை யிலுங்கூட அக்காலப் பெண்கள் ஏற்றமுற்றுத்தாமே இருந்தார்கள்? பல்வேறு பந்துகளே அவர்கள் ஆடிப் பாடி விளையாடுங் காட்சி விளக்க முடியாத காட்சி யன்ருே? பந்தும், அம்மனையும், பிறவும் அவர்தம் விளை யாடல்கள். சுனையாடலும், மலர் கொய்தலும் அவர்கள் விரும்பிய செயல்கள். . கழல்மல்கு பங்தொடு அம்மானை முன்றில்

கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்' (1-4:2) 'ஏல மலிகுழலார் இவைபாடி எழுந்தருளாற் சென்று

சோலை மலிசுனையிற் குடைந்தாடி (1-184:2) என்னும் தேவாரப் பாடலடிகள் அவர்தம் செயல்களே விளக்குவன அல்லவா? ... }

அவர்தம் இன்னெலியை வியந்து போற்றும் சம்பந் தர் கூறுவதைக் கேளுங்கள்: - வாரிசைமென் முலைமடவார் மாளிகையின் சூளிகை மேல்

LDö, LILIII JITL Lö, . காரிசையும் விசும்பியங்கும் கணக்கேட்டு மகிழ் வெய்தும்

கழுமலமே' என்று அவர் தாம் பிறந்த ஊரை எவ்வளவு பெருமை யோடு பாராட்டுகின்ருர்! அந்த ஊர்ப்பெண்கள் தம் மாளிகையில் மகாதேவனைப் பாராட்டும் அந்தப் பண்ணுர் பாடல்கள் வான் வழிச் செல்லும் தெய்வ கணங்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/46&oldid=600896" இலிருந்து மீள்விக்கப்பட்டது