பக்கம்:பெண்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் காலப் பெண்டிர்

காலம் செல்லச் செல்லத் தமிழ் நாட்டு நாகரிகத்தில் பிற நாகரிகங்கள் வந்து கலக்க ஆரம்பித்துவிட்டன. தமிழ் நாட்டவரோடு பல நாட்டு மக்கள் படை எடுத்து வந்தும், வேறு வகையில் பழகியும் ஒன்றிக் கலந்து விட்டனர். அவரவர்தம் பழக்கவழக்கங்களும் தமிழ் நாட்டில் நிலைபெற ஆரம்பித்துவிட்டன. யா தொரு வேறுபாடும் இன்றி ஒன்றிக் கலந்து வாழ்வின் வளம் பெருக்கிய தமிழ் நாட்டில் எத்தனையோ வேறுபாடுகள் இடம் பெறலாயின. இப்படியே நூற்றண்டு தோறும் கலப்பும், வளர்ச்சியும், பிறவும் நாட்டில் பெருகிக் கொண்டு வருகின்றன. பெண்களது நிலையும் அது போன்றே திரிந்தும், மாறுபட்டும், கெட்டும், உயர்ந்தும் கால நிலைக்கு ஏற்பச் சென்றுகொண்டே இருக்கின்றது.

இதோ! பல்லவர் காலத்து இறுதியிற் பல காட்சி கள் மனக்கண் முன் வருகின்றன. முன்கண்ட காட்சிக் கும் இவற்றிற்கும் இடையில் இரண்டு நூற்ருண்டுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/48&oldid=600898" இலிருந்து மீள்விக்கப்பட்டது