பக்கம்:பெண்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் காலப் பெண்டிர் 47

யும் கொண்டு வழிபட்டார்கள் என்பது நன்கு விளங்கு கின்றதே ! சங்கிலியார் தம் உள உரத்தால், பெற்ருேர் அவரை யாருக்கும் மணம் செய்து வையாது, அவர் விருப்பப்படி ஒற்றியூரில் இருக்கவழிசெய்தனர் என்பதை யும், அவர்தம் வேளாண் வாழ்க்கையையும் எண்ணும் போது, பெண்கள் அக்குலத்தில் எவ்வாறு போற்றப்பட் டார்கள் என்பது தெரிகின்றதே ! மற்றும் அவரவர் தத் தம் கருத்துக்கேற்ற கணவரை, சாதி வேறுபாடுகளையும் பாராட்டாமற் பெற்ருர்கள் என்பதைக் காட்டும் செய லன்ருே அவர் செயல் ? பெண் ஒருத்தி மனைவியாய் இருக்கும் போது மற்ருெருத்தியை மணத்தலாகாது; மணந்தால், துயர் பெருகும், என்பதையேயன்ருே சுந் தரர் தம் இரண்டாம் மணமும் பின் நடந்த பிற நிகழ்ச்சி களும் காட்டுகின்றன ? .

'கொண்ட மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதி தவறின், அவர் கடவுளுக்கே தோழராயினும், தக்க தண்டனை பெற்றுத்தான் ஆகவேண்டும், என்பதை யன்ருே சுந்தரர்தம் கண் இழப்புக் காட்டுகின்றது ! அவர் கண் இழந்தபின் கதறும் நிலை, அவர் பெண்கள் சொல்லுக்கு எவ்வளவு அஞ்சுகிருர் என்பதை நினைப் பூட்டுகின்ற தன்ருே ? “அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னல், அழையேல், போ குருடா, எனத் தறியேன்,” என்று அவர் பாடும் போது, வீட்டு மகளிரின் சொல்லுக்கும் பழிக்கும் அவர் எவ்வளவு அஞ்சிர்ை என்பது தெரிகின்றதே 1 -

சுந்தரர் காலமாகிய பிற்காலப் பல்லவர் காலத்துப் பெண்கள் பெருங்கலாவல்லிகளாய் விளங்கினர்கள் என் பதை அக்கால வரலாறுகள் நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகின்றனவே பல்லவர் காலந்தானே நாட் டில் சமயத்தையும் கலையையும் ஒருசேர ஓம்பிய காலம் ! ஆனால், அதற்காக ஒரு குலம் உண்டு என்று கூறுகின்ருர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/50&oldid=600900" இலிருந்து மீள்விக்கப்பட்டது