பக்கம்:பெண்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் காலப் பெண்டிர் 5科

பேசுவது பெருவியப்பன்ருே? இதே நிலையில் ஆழ்வாருள் ஒருவராய் அமைந்த ஆண்டாள் பாடிய பாடல்களும் அன்றைய தமிழ் நாட்டுப் பெண்டிர் தம் தன்மைகளே விளக்குகின்றனவே! எனினும், ஒரு பெண் தன்னைப் பற்றியும் தன் பெண் குலம் பற்றியும் பெருமை பாராட்டு வதைவிட், ஆடவரும் தம்மை ஆர்வத்தால் பெண்ணுக்கிப் பேசும் பெருநிலைதானே போற்றற்குரியதாகும் ! அன்று. முதல் அடியவர் பலர் ஆடவராயினும் தம்மைப் பெண் ணுக்கிக்கொண்டு பலப்பல விதமாகக் காதல் நெறியைக் கடவுள் நெறியோடு பொருத்திப் பாடும் பாடல்கள் நாட் டில் வளர்ந்துகொண்டே வருவதைக் காண்கிருேம். எனவே, வீட்டுலக வாழ்வாகிய தெய்வ நெறியாயினும், மண்ணுலக வாழ்வாகிய காதல் நெறியாயினும், பெண்ம்ை. யின் பெருநலம் இன்றேல், ஒன்றும் இன்ரும் என்பது தான் அவர்கள் கண்ட முடிவு என்பதில் ஐயமும். உண்டோ !

இந்தப் பெருங்காட்சிகளுக்கிடையில் வேறு சில சிறு சிறு காட்சிகளும் அதோ வந்து வந்து போகின்றனவே ! சீவகன் வாழ்வுச் சித்திரங்கள்தாம் என்று திட்டமாகச் சொல்ல இயலாவிட்டாலும், அந்த வரலாறு போன்ற். இரண்டொரு காட்சிகள் எதிர்ப்படுகின்றன. காலத்தால் அவை முன்னே பின்னே என்று ஆராய்ச்சியாளர்கள் ஐயுறுவதற்கு ஏற்றபடி அன்ருே அந்தக் காட்சிகளும் திட்டமாகத் தெரியாமல் வந்து வந்து போகின்றன . அதோ யசோதரன் ஆட்சியும் காட்சியும் தெரிகின்றன. ஒருபுறம் பெண் இன்பம் பெரிதெனப் போற்றி அம் மங்கையர் குலத்தை மதிக்கும் மாபெருங் காட்சி தெரி' கின்றது. அதே வேளையில் மற்ருெரு புறத்தில் மங்க்ை ஒருத்தி காமக்களியாட்டில் கண்டவைேடு நின்று, உற்ற வர்களுக்கும் ம்ற்றவர்களுக்கும் பெருங் கொடும்ை. இழைக்கும் காட்சிகளும் தெரிகின்றனவே! பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/54&oldid=600904" இலிருந்து மீள்விக்கப்பட்டது