பக்கம்:பெண்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பெண்

இனத்தும் பேய் உண்டோ என்று பேசக்கூடிய அள வில் அதோ இரண்டொரு கோரக் காட்சிகள் தென்படு கின்றனவே! அரசியாக வாழப் பிறந்தும், அல்லல் வாழ்வை விரும்பிக் காமக் குட்டையைக் கலக்கும் எருமை மாடாக மாறும் ஒரு பெண் வடிவைத் தாங்கிய பேய் உருவமும் தோற்ருமல் இல்லை. இவையெல்லாம் காவி யத்தும் நாடகத்தும் காணும் காட்சிகளாய் அமையினும், அக்காலப் பெண்ணினப் போக்கைச் சித்திரிக்கும் பெருஞ் சித்திரங்களாயன்ருே தோன்றுகின்றன! நாட்டில் கலப் புக்கும் பிறவற்றிற்கும் ஏற்பத் தமிழ் நாட்டுப் பெண் .ணினம் வளைந்து கொடாவிட்டாலும், பாடும் புலவரும் கற்பனைக் கவிஞருமாகிய அவர்கட்கும் தன் கருத்துக் கேற்ற உருவத்தையும் குணத்தையும் காட்டித் தரு கின்றதே என்னவோ, திட்டமாகத் தோன்ருத அக் காட்சிகளைப்பற்றி நாம் எண்ணிக் கவலைப்படுவானேன் ! இவற்றையெல்லாம் எண்ணும்போது வேறு சில காட்சிகளும் மனக்கண்முன் வந்து வந்து செல்கின் றனவே! பெண் நிலையில் நின்றுதான் இறைவைேடு இரண்டறக் கலக்க இயலும் என்பதைக் கண்டு அந் நிலையைத் தம் வாழ்விலும் மேற்கொண்டு, மற்றவர்கட்கும் அறிவுறுத்திய மாணிக்க வாசகர், அதே பெண் இனத்தைப் பழிக்கும் காட்சி என் கண் முன் வந்து கவலச் செய் கின்றதே ! உலகில் மிக உயர்ந்தவள் தாய் என்பதை, பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப்பரிந்து' என்ற அடியில் ஆண்டவைேடு ஒப்பிட்டுக் காணும் அம்மாணிக்க வாசகரே, சில இடங்களில் பெண்களைப் பழித்துரைப்

பதைக் கண்டால் பதைபதைக்க வேண்டியுள்ளதே ! tதைய லாரெனும் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு

. : மாருமே

கருங்குழலினர் கண்களா லேறுண்டு கலங்கியே

. கிடப்பேனே !!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/55&oldid=600905" இலிருந்து மீள்விக்கப்பட்டது