பக்கம்:பெண்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெண்

துறவியார் எங்கள் இனத்தைப் பழிக்க எப்படி உரிமை பெற இயலும் ? எங்கள் வாழ்வினை-இன்பத்தைஏற்றத்தை அறிந்து கொள்ளாது, இன்ப துன்பங்களில் நாங்கள் ஆடவரைத் தாங்கும் தகவையும் அறியாது, ஒருவர் பாடுவது என்ருல், அது மன்னிக்க முடியாத குற்றந்தானே?நெற்றிக் கண்ணக் கண்டும் அஞ்சாத அற வழியில் வாழ்ந்த செந்தமிழ் நாட்டுப் பெண் என்ற காரணத்தால் கூறுகின்றேன்! மணி மொழியார் என் மதிப்புக்குரியவரானலும், தம்மையே பெண் தன்மைக்கு மாற்றும் அவர், இப்படிப் பெண்களைப் பழித்தல் குற்றந்தான். ஆம். அவரும்அவரைச் சேர்ந்த ஒரு சிலரும் து விச் சென்ற அந்த விதையே பிற்காலத்தில் வாழ்ந்த பட்டினத்தார் போன்ற பிறரும் எங்களை மேலும் ஏளனமாக இழித்துப் பேசவும் தாழ்த்தவும் வழி செய்து

விட்டது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/57&oldid=600907" இலிருந்து மீள்விக்கப்பட்டது