பக்கம்:பெண்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

உள்ளத்தைப் பெண்ணுக்கி உருகி உருகிப் பாப் டிசைத்தார் மணி மொழியார். அந்த வழியே என் உள்ளமும் பெண்ணுயது. அப்பெண் உள்ளம் வரலாறு அறிந்த நாள் தொட்டுத் தமிழ்ச் சமுதாயத்தே பெண்கள் வாழ்ந்ததை எல்லாம் எண்ணிற்று. சிறக்க வாழ்ந்த நாட்கள் சில, சரிந்து வீழ்ந்த நாட்கள் சில. அவற்றை யெல்லாம் என் உள்ளத்தடத்து, உணர்ச்சித் திரையில் காணக் காண உண்டான சொற்களே இந்நூல் வடிவில்

வந்துள்ளன.

புலவர் சிலரும் கவிஞர் சிலரும் போற்றப்படுகின் றனர்; சிலர் பழிக்கப்படுகின்றனர். அப்போற்றலும் பழிப்பும் பெண் உள்ளப் பெருமூச்சின் வழி வந்தன. வேயன்றி என் சொந்தமல்ல. தமிழ் நாட்டுப் பெண் னினம் காலந்தோறும் வாழ்ந்த கதையை ஒரு பெண் உளக்கண்ணுல் கண்டு திட்டும் கற்பனைச் சொல்லோவிய மாகிய இந்நூல், தமிழ் நாட்டுக்கு - சிறப்பாகத் தமிழ் மகளிர்க்கு-உணர்ச்சி எழுப்பும் ஒரு கருவூலமாகலாம் என நினைக்கின்றேன்.

இந்நூல் வெளி வர உதவிய அனைவருக்கும் என் கன்றி, .

பணிவார்ந்த,

சென்னை-30, ! அ. மு. பரமசிவானந்தம்

30—9—'60. Í

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/6&oldid=600856" இலிருந்து மீள்விக்கப்பட்டது