பக்கம்:பெண்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பெண்

நாடகத்தில் அவளது தியாகச்சின்னம் முழுவதும். நன்கு விளங்குகின்றதே! -

இராமனுக்குப்பட்டம் என்றதும் எவ்வளவு மகிழ்ந் தாள் கைகேயி எத்தனைச் சிறப்புச்செய்தாள் செய்தி கொணர்ந்த கூனிக்கு! பின்பு ஏன் அவள் மனம் அவ்வளவு விரைவில் மாறியது?ஆம்! அதுதான் எண்ணவேண்டுவது கைகேயியைத் தசரதன் மணக்கும் போது அவளுக்குக் 'கன்யா சுல்க”மாகத் தன் நாட்டையே அளித்துவிடு கிருன். அந்த வாக்கை மீறி இராமனுக்குப் பட்டம் கட்டுவதற்காக, முன் கூட்டியே பரதனைப் பாட்டி வீட்டிற்கு அனுப்பிவிடுகின்ருன். அவன் சூழ்ச்சி, செயல் அனைத்தும் உலகுக்குப் புலப்படாதபடி செ ய் து, அனைத்தையும் தன் மேல் ஏற்றிக் கொண்டு என்றென்றும் 'அழியாப் பழி' என்னும் புகழ் பெற்ற அந்தச் செம்மனச் செல்வியைத் தீயள்' என்ற நா வாழுமா? கம்பர் அவளே நினைத்து, அவள் தியாகத்தை மறைத்து, மன்னனைச் செவ்வியனுக்க முயன்றதிறத்தில் அவளே வாய் கூசாது வைகின் ருர். என்ருலும், கைகேயி தன் தூய உள்ளமும் பிறவும் அவர் மொழி வழி அங்கங்கே புலப்படாமலில்லே. மற்றும் அந்தப் பாசகவியின் நாடகங்களும் இவற்றை வலியுறுத்துகிறன. இறுதியாகக் கைகேயியைப் பற்றியும், அவள் மனமாற்றம் பற்றியும் இதோ. க ம் பரே ஏதேதோ சொல்கிருரே! இவற்றைக் கேட்போம்:

'தீய மந்தரை அவ்வுரை செப்பலும் தேவி

தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர் மாயை யும்அவர் பெற்றால் வரம் உண்மை யானும் ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத் தானும்’ என்பதும்,

அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்

துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்; இரக்க மின்மையன் ருேஇன்றிவ் வுலகங்கள் இராமன் பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றனவே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/63&oldid=600913" இலிருந்து மீள்விக்கப்பட்டது