பக்கம்:பெண்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் காட்டும் காரிகைமார் Ꮾ↑

என்பதும் அவரது உள்ளத்தையும் உ ண ர் ைவ யு ம் ஒருங்கே காட்ட வில்லையா!

அதோ, மற்ருெருத்தியின் அழுகுரல் காதில் விழு கின்றதே! அவள் யார்? ஆ! மண்டோதரியா ஆகா! என்ன அருமையான பெண் அவள்! அரக்கர் குலப் பெண்களிலும் அமுதமனையவர் உள்ளனர் என்பதைக் காட்டுவதற்காக இவளும் திரிசடையும் இலங்குகின்ருர் களே! ஏன் சூர்ப்பணகைதான் என்ன! தான் கொண்ட வனக் கணவகைப்பெருத காரணத்தாலல்லவா அவள் பல வகையில் சீதைக்குத் தீங்கு நினைத்தாள்? போகட் டும்! அந்த மண்டோதரி என்ன சொல்லிப்புலம்புகிருள்? இராவணன் உடம்பில் பட்ட அம்பையெல்லாம் கண்டு கண்டு கதறுகினருளே !

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை

மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து

தடவியதோ ஒருவன் வாளி !' ன்ன்றல்லவா புலம்புகிருள் ! எவ்வளவு ஏற்றமான கருத்து! கற்பு உடலால் மட்டும் காக்கப் படுவதன்று : உள்ளத்தாலும், அவ்வுள்ளத்து உணர்வாலும் காக்கப் படுகின்ற ஒன்று என்பதைக் கம்பர் தம் கண் முன் நின்ற தமிழ் நாட்டுப் பெண்ணே நினைத்துப்பாடியது மறக்க முடியுமா !! வால்மீகியில் இந்தச் சொற்கள் உண்டா ? 'கற்புடைப் பெண்டிர் பிறர் கெஞ்சு புகார், என்ற பழங் தமிழ்ப்பா அடியின்படி இருபாலாரும் மற்றவர் உள்ளங் களில் புகாதபடி, கொண்டாரோடு கூடிவாழும் சுற் றம் எத்தனை வகையாகக் கண் முன் காட்டுகின்றது ஆ! அதோ ஒரு காட்சி! எத்தனையோ நாள் உடன் இருந்தும், அண்ணியை நிமிர்ந்து நோக்காத ஆண்மையுடைய தெளி வுடைச் செம்மல் இலக்குவன், கிட்கிந்தையின் அவளு டைய அணிகளை அறியாது அலமருங்காட்சி அது இப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/64&oldid=600914" இலிருந்து மீள்விக்கப்பட்டது