பக்கம்:பெண்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பெண்

படியே காட்சிகள் ஒன்றன் பின் ஒன்ருக விரைந்து வருகின்றன. அனைத்தையும் எண்ணக்கூட முடிய வில்லையே ஆகா! இப்படிப் பிறநாட்டுக் காவியங் களிலும் தமிழ் நாட்டுப் பெண்களின் பண்பையே காட்டும் கம்பரை வியவாதிருக்க முடியுமோ !

அதோ ஒரு கிழ உருவம்-ஆம்-பெண் உருவந்தான். துரத்தே வருகின்றதே ! யார் அவர் ! ஒளவையார் i முன்னே ஓர் ஒளவையாரைக் கண்டோமே ! ஆம் இவர் அவரினும் வேருயவர் போலும்! வயதிலும் ஒழுக்கத்திலும் பிறநெறியிலும் ஒர் ஆயிரம் ஆண்டுக்குமுன் கண்ட ஒளவை யாரை இவர் ஒத்திருப்பினும், அந்த அதிகனின் நெல்லிக் கணி உண்ட ஒளவையாரல்லர் இவர். அவரினும் இவர் திட்டமாக வேறுபட்டவரே. என்ருலும் இவரும் பெண் இனத்தை வாழ வைக்க வந்த பெருஞ்செல்வியார் என் பதில் ஐயமுண்டோ ; இதோ ! இவர் கையிலே எத்தனை நூல்கள்! ஆம் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி-இன்னும் என்னென்னவோ தெரிகின் றனவே! இவற்றையெல்லாம் எழுதிய செல்வியரா இவர்! இந்த மூதாட்டியார் எழுதிய பாடல்கள் இன்று இளைஞர் உள்ளங்களிலெல்லாம் இடம் பெற்றுள்ளனவே ! தமிழ் படிக்கத் தொடங்கி எழுத்தறிந்த உடனே ஆத்திசூடியும் கொன்றைவேந்தனுந்தாமே படிக்கின்றர்கள் நம் நாட்டுச் சிறுவர்கள் ? இவர் பாடல்கள் எவ்வளவு எளிமையாய் உள்ளன! சிறு சிறு தொடர்களாலே எத்தனை உயர்ந்த பொருள்களே யெல்லாம் அடக்கிக் கூறிவிட்டார்! இவரைப் பற்றி எத்தனையோ கதைகள் நாட்டிலும் ஏட் டிலும் வழங்குகின்றனவே அவற்றுள் எது உண்மை, எது பொய் என்பது அறியக் கூடவில்லை என்ருலும், இவர் நம்மைப் போலச் சாதாரணமாய்ப் பிறந்து வளர்ந்து, பெருமூதாட்டியாராகிய பின்னரே சில நீதி நூல்களே இயற்றினர் என்பது மட்டும் மறுக்க முடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/65&oldid=600915" இலிருந்து மீள்விக்கப்பட்டது