பக்கம்:பெண்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழாம் நூற்ருண்டில் பாவையர் நிலை 71.

துகின்றன! இந்தப் பேரறம் வளர்ந்த நாட்டிலேதான் உலாக்களும், பிற பிரபந்தங்களும் தோன்ற, பெண்களே அவ்விலக்கியங்களில் வைத்துப் பிழைபட்டவராகப் பேசும் நெறியையும் காண்கின்ருேம். பெண்மை இன் றேல், இலக்கியம் இன்று, என்னும் அளவுக்கு வந்த புலவர்கள், அப்பெண்மையின் நிலைமையை இழித்துக் கூறுவானேன்? தற்காத்து வாழும் பெண்ணின் பெருநெறி வாழ்வைப் போற்றுவதை விடுத்து, அவருள் பல பிரிவு கள்ே ஏற்படுத்திக்கொண்டு, வெற்று இயந்திரங்களென அப்பெண்டிரை இருத்தி, அவரைக் கற்பிழந்தவராகவும், கண்டவரைக் கண்டு காதல் கொண்டு கலங்குபவ. ராகவும் காட்டிக் கொடுமைப்படுத்துவானேன்? எந்நாட் டுக்கும் இல்லாத கற்பின் திட்பமாகிய தமிழ் நாட்டு உரிமைச் சொத்து இ வ் வாறு பறிகொள்ளப்படுவா னேன்? அவ்வுரிமையைப் பறித்தவர் பிற நாட்டவரல் லரே! இந்தத் தமிழ் மண்ணிற்பிறந்து, இந்தப் பண் பாடுகளை மறவாது கொள்ள வேண்டிய தமிழன்-ஆம்கலைஞனே பறிக்கின்றன். அதை நினைத்தால்தான் அவலம் பிறக்கிறது! -

பிற்காலப் பெரும்புலவர்களெல்லாருங்கூடப் பெண் களை எவ்வளவு இழிவாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்! விலங்குகளினும் கேடாகவன்ருே பெண்கள் மதிக்கப்படுகின்ருர்கள்! பிறநாட்டுக் கொள்கைகள் தமிழ் நாட்டில் அதிகமாகப் பரவியது காரணமோ என்னவோ, தமிழ் நாட்டில் எங்கள் இனத்துக்குப் பெருமை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாய் இருந் ததோ, அவ்வளவுக் கவ்வளவு இழி நிலைமை அதே நாட்டில் எங்களுக்கு உண்டாகி விட்டது! பல புராணங் களும் பிற இலக்கியங்களும் பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதப்பட்டன. அவற்றி லெல்லாம் பெண் இனம் பிழைபடத்தான் பேசப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/74&oldid=600924" இலிருந்து மீள்விக்கப்பட்டது