பக்கம்:பெண்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பெண்

சங்க காலத்தே மக்களொடு கலந்து வாழும் மனையறத் தையும் நன்கு ஒம்பி, மனேயறமே பிறவறங்களுக்கு வழி காட்டியாக அமைவது என்பதை விளக்கி அன்றைய புலவர்கள் இலக்கியங்களை வாழ்வோடு கலந்து கலந்து இயற்றினர்கள். அவை இன்றும் - இரண்டாயிரம் ஆண் டுகள் கழித்தும்-வாழ்கின்றன. என்றும் வாழவும் வாழும். ஆனால், அதற்கு நேர்மாருக, காணுத ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு கண்டவற்றை மித்தை என்று பேசி மாறுபட்ட வாழ்வு நடத்தி, அந்த மாறுபாட்டையெல் லாம் மறைக்கும் வழிகளில் வாய்க்கு வந்தவற்றையெல் லாம் பாட்டாகப்பாடும் பிற்காலப் பாடல்களெல்லாம் காலமெனும் கடும் புனலில் மூழ்கடிக்கப்படும். இருநூறு ஆண்டுகளுக்குள் அவை இல்லாது ஒழியும் என்பது ஒரு தலை. வாழ்க வாழ்க்கை இலக்கியம் !’ என்று வாழ்த்து கின்றேன் !

ஒரு புறத்தே இந்த முறையில் பெண்களை வைதும் வாட்டியும் வரும் அதே நேரத்தில், தமிழ் நாட்டில் தெய் வங்களையெல்லாம் பெண்களாக்கிக் காணும் காட்சியுக் தான் புலப்படுகிறது. படிப்பைக் கலைமகளாக்கியும், செல்வத்தை அலைமகளாக்கியும் போற்றக் காண்கிருேம் தமிழ் நாட்டில். இன்னும் வீர இலக்குமி முதலிய இலக்கு மியர் எண்மரை ஏற்படுத்தி வணங்குவதும், நிலத்தை 'நிலமகள்' என்று போற்றி வணங்குவதும் நாட்டு வழக் கங்களாய் அமைந்துள்ளதை எண்ண வியப்புத்தான் மேலிடுகிறது. பெண்களைப் பேயென்றும் நாயென்றும் பேசிப் பழித்த அதே சமுதாயம், தெய்வங்களையும், பொன்னையும், பொருளையும், கல்வியையும் வீரத்தையும் பெண் உருவங்களாகக் கண்டு போற்றும் தன்மை எவ ருக்குத்தான் வியப்பை உண்டாக்காது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/81&oldid=600931" இலிருந்து மீள்விக்கப்பட்டது