பக்கம்:பெண்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழாம் நூற்ருண்டில் பாவையர் நிலை 81:

அறமுரைக்கும் பெண்புலவர் இல்லாததே என எண்ணு கின்றேன்.

ஆம் சங்ககாலத்து ஒளவையும் பிறரும் இருந்தது

போன்றும், பின் காலத்து ஓர் ஒளவை வாழ்ந்தது போன்றும், அக்காலத்தும் ஓர் ஒளவை வாழ்ந்திருந். தால், இத்தனைக் கொடிய அம்புகள் எங்கள் மேல் எய்யப்பட்டிருக்கமாட்டா. எப்படி ஒரு பெண் புலவர் முன்னுக்குவர முடியும் இவர்களைப் போன்ற கொடி யர்கள் இடையிலே? தமிழ் நாட்டு வரலாற்றிலேயே பெண்புலவரற்ற கால ம ல் ல வா அது? பெண் அடிமையை நிலை நாட்டி வேரூன்றச் செய்த கால மல்லவா அது? நல்ல வேளை அந்தக் கொடுங்காலம் அகன்றதே!

ஆனால், அதே நிலையில் உலகத்தின் பிற அரங்கங் களிலே பெண்கள் எவ்வாறு கடத்தப் படுகின்ருர்கள் என்பதைக் காணும் வாய்ப்பினைப் பெற்ற நமக்கு அந்தக் காட்சிகள் ஒருவாறு ஆறுதல் தருகின்றன. ஆங்கில நாட்டிலே அந்தக் காலத்து நாட்டு நடப்பையும் பிறவற்றையும் உள்ளடக்கியே பேராசிரியன் செகப் யிரியன் (Shakespeare) எழுதியவைதாமே அவன் நாட கங் கள் அத்தனையும்? அவற்றுள் அவன் பெண்களுக்குத் தரும் ஏற்றமும் தோற்றமும் அறியின் மனமகிழ்கின்றது! இங்கே பெண் டிரைப் பேயெனப் போற்றும் புலவர்கள் வாழ்ந்த அந்நாளிலே, அங்கே பெண்ணினம் போற்றப் பட வேண்டிய வகையில் வைத்துப் போற்றும் நிலை கண்டு இரண்டிடத்துக்கும் உள் ள வேறுபாட்டை எண்ணுதிருக்க முடியவில்லையே! பலப்பல நாகரிகங் களும், கலாசாரங்களும், பிறவும் நாட்டில் குடி புகுந்த போதிலும், தமிழ் நாட்டுப் பெண்மை தன் நிலை கெடாது தான் வாழ்ந்து வந்துள்ளது. ஆயினும், அவருடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/84&oldid=600934" இலிருந்து மீள்விக்கப்பட்டது