பக்கம்:பெண்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்ருண்டின்

- * தொடக்கம்

'நோய்கொண்டா லும் கொள்ளலாம் நூறு வயதளவும் பேய்கொண்டாலும் கொள்ளலாம் பெண்கொள்ள -

(லாகாதே!’ என்று பாடினவன் யாரோ ஒரு காமப்பித்தகைத்தான் இருக்க வேண்டும். கண்டவரோடு காமச் சேற்றில் புரண்டு அதன் பயனே அனுபவித்தவனே இப்படிப் பாட மு டி யு ம். பெண்மையையும் தாய்மையையும் உச்சியில் வைத்துப் போற்றிய ஒப்பற்ற தமிழ் நாட்டில் ஒருவன் இப்படிப் பாடத் தொடங்கினன் என்ருல், அவனை மனிதன் என்று சொல்ல முடியுமோ? தமிழ் நாட்டில் பெண்கள் நிலை மிகத் தாழ்ந்திருந்தது என்ருல், அக்காலம் சென்ற இரண்டொரு நூற்ருண்டுகள் என்று தானே சொல்ல வேண்டும்? எங்கோ இரண்டொரு பெண்மணிகள் தமிழ் நாட்டிலும், இந்தியமண்ணிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/86&oldid=600936" இலிருந்து மீள்விக்கப்பட்டது