பக்கம்:பெண்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பெண்

வீரமும் தயையும் கொண்டு பேரும் புகழும் பெற்று விளங்கி வந்தார்கள் என்ருலும், பெரும்பாலோர் கண்மூடி வழக்கங்களில் காலம் கழிக்கத்தான் செய்தார்கள். கருத்தொருமித்த காதலனைக் கணவகைப் பெற்றுக் காரிகையார் வாழ்ந்த நாட்டில், பெற்ருேர் பார்த்து மணம் செய்துகொடுக்கும் வழக்கம் குடியேறிவிட்டது. மங்கையர் கற்புப் பொற்புடன் விளங்கிய நாட்டில், கற்புத் தெய்வங்கள் பல வாழ்ந்த தமிழ் நாட்டில், பிற நாட்டுப் பெண் தெய்வங்கள் குடிபுகுந்தன. தமிழ் நாட்டின் முழுப்பகுதியில் அல்லாவிட்டாலும், ஒரு சில பகுதிகளிலாயினும் எப்படி இந்தத் துரோபதியின் கோயில் இடம் பெற்றது என்று எண்ணும் போது வருந்தாதிருக்க முடியவில்லை. இலக்கிய நெறியில் வட நாட்டு இருபெருங் காவியங்கள் இங்குக் குடியேறின. ஒன்று, இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையா லும் தொடாது வாழ்ந்த உயர்ந்த வாழ்வின் இலட்சியம் கொண்ட் இராமன் வரலாறு. மற்றென்று, ஐவருக்கும் மனைவியாகி, மற்ருெருவனையும் மனத்தால் நினைத்த தாகக் கூறப்படும் துரோபதியின் கதையான பாரதம். துரோபதி இங்குத் தெய்வமாகப் போற்றப்படுகின்ருள் என்ருல், அது தமிழ் நாட்டுப் பெண் குலத்துக்கே வரும் இழிவுதானே ? பின்பு எப்படி இக்கண்மூடி வழக்கத்தைத் தமிழ்நாட்டுமக்கள் மேற்கொண்டார்கள்? வெளி நாட்டான் ஒருவன் இந்த வழிபாட்டைக் கண்டால், தமிழ் நாட்டுப் பெண்கள் எல்லாம் இப்படிப் பலரை மணக்கும் வழக்கத்தாலேதான் அவளே வணங்குகின் முர்களோ என எண்ண மாட்டா?ை ஆல்ை, அது உண்மையாகுமா? உயிரினும் செயிர்திர் காட்சிக்கற்புச் சிறந்தன்று, என்று போற்றிய-போற்றி வரும்-தமிழ் நாட்டில், எப்படி இந்தப் புதுப் பத்தினியின் வழிபாடு, குடி புகுந்தது? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/87&oldid=600937" இலிருந்து மீள்விக்கப்பட்டது