பக்கம்:பெண்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்ருண்டின் தொடக்கம் 85

ஆம் ; ஆய்ந்தால் ஒருவாறு காரணம் உருவாகின்றது. நம்மை அக்காரணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழைத்துச் செல்கிறது, சேரன் செங்குட்டுவன் அன்று கண்ணகிக்குச் செய்த கோயிலே இன்று தமிழ் நாட்டின் பல பகுதிகளில் துரோபதிக் கோயிலாக மாறியிருக் கின்றது என்பது மறுக்க முடியாத ஒன்ருகும். 'எந்நாட் டவரும் இமய வரம்பன் - நன்னட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தந்தேன் வரமென்றெழுந்த தொருகுரல்.’ என்ற இளங்கோவடிகளின் வாக்கின் மூலம் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் வழிபாடு பரவிற்றென்பதை அறியலாம். அது காலப் போக்கில் பிறர் கலப்புக் காரணமாக மாறி யிருக்கின்றது. அங்கியங்கடவுள் அவள் ஆணை வழி நல்லாரை விட்டு, அல்லாரைச் சுட்டு, மதுரையைப் பாழ் படுத்திய வரலாறே நெருப்பு மிதிவிழா. அன்றேல், துரோபதிக்கும் தீ மிதித்தற்கும் தொடர்பு என்ன ? அந்தத் துரோபதி பிறந்த நாட்டிலோ, புகுந்து வாழ்ந்த நாட்டிலோ அவருக்குக் கோயிலும் பூசையும் இல்லாத போது இங்குமட்டும் இந்த கில எப்படி வந்தது? கண்ண கியைத் துரோபதியாக்கித் தமிழ் நாட்டுப் பெண் னினத்தைத் தாழ்த்த வந்த ஒரு கொடுமை அது. கற்பிலும், காதலிலும், உரிமையிலும், உயர்நிலையிலும் தருக்கி வாழ்ந்த தமிழ் நாட்டுப் பெண்மைக்கே பலர் கேடு சூழ முயன்றனர். தமிழ் நாடு இன்று தனியாய் இல்லை; சில நூற்ருண்டுகளாகவே அரசியலாலும் பிறவற் முலும் பரந்த பாரதத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது. ஆகவே, பல நாகரிகங்கள், கொள்கைகள், கருத்துக்கள் இங்கே கால்கொள்ள ஆரம்பித்தன. அவற்றுள் பெண் ணடிமையும் ஒன்று போலும் விலங்கினும் கீழாகப்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/88&oldid=600938" இலிருந்து மீள்விக்கப்பட்டது