பக்கம்:பெண்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்ருண்டின் தொடக்கம் 89.

பொதுவில் வைப்போம்,' என்ற சொற்கள் எழுகின்றன. அது மட்டுமா ? இந்த ஆடவர் மனம் போன போக் கெல்லாம் போவதுதானே பெண்மை கெடுவதற்குக் காரணமாகின்றது என்பதை அவர் எழுத மறக்க வில்லை.

ஆண்களெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும்கற் பழிந்தி டாதோ? என்று கூறும் சொற்கள் ஆடவர் செவியில் ஏறிலைன்ருே நம் நாட்டுப் பெண்மை உயரும் !

தமிழ் காட்டு மக்கள் காதலே எவ்வளவு துச்சமாக மதிக்கின்ருர்கள் என்பதைக் காண அவர் உள்ளம் கொதிக்கின்றது; சொற்கள் புறப்படுகின்றன ;

'காதலினல் மானுடர்க்குக் கலவி யுண்டாம் ;

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் ; காதலினல் மானுடர்க்குக் கவலை தீரும் ; w

கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம் ; ஆதலினல், காதல்செய்வீர் உலகத் தீரே !

அஃதன்ருே இவ்வுலகத் தலைமை இன்பம் ? காதலினல் சாகாமல் இருத்தல் கூடும் ;

கவலைபோம்; அதனலே மரணம் பொய்யாம்.” என்பதும்,

நாடகத்தில் காவியத்தில் காத லென்ருல்

நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்ரு மென்பர் ; ஊடகத்தே வீட்டிலுள்ள கிணற்ருே ரத்தே

ஊரினிலே காதலென்ருல் உறுமு கின்ருர் பாடைகட்டி அதைக் கொல்ல வழிசெய் கின்ருர் ;

பாரினிலே காதலெனும் பயிரை மாய்க்க மூடரெலாம் பொருமையில்ை விதிகள் செய்து

முறைதவறி இடரெய்திக் கெடுக்கின் ருரே ! என்பதும் காதல் வாழ்வின் ஏற்றத்தையும் அதைக் கெடுக்க எண்ணும் கசடர்தம் மன நிலையையும் எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/92&oldid=600942" இலிருந்து மீள்விக்கப்பட்டது