பக்கம்:பெண்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பெண்

கல்வி நிலையங்கள் படிப்பவர் தொகை

ஆண் பெண் ண் பெண் கல்லூரிகள் 339 46 | 1, 40,088 4, 816

பள்ளிகள் | 184, 173| 30, 475 112,669,618 18,89774

அரசியல் 15, 793 4, 259 479, 742 112,369 அங்கீகாரம், பெருதவை.

2,00, 305) 34, 780 | 1,32,83,448. 20, 06953.

இதுதான் பத்தாண்டுக்கு முன் எடுத்த புள்ளிக் கணக்கு. ஒருவேளை இன்று சற்று உயர்ந்திருக்கலாம். நம் நாட்டில் பெண்களைப் பற்றிய கவலையும் கருத்தும் பொதுமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அவ்வளவு அதிக மாக இல்லை என்பதை யார் மறுக்கக் கூடும்? அந்தப் பாழாய்ப் போன பரத்தை முறையைத் தமிழ் நாட்டு அரசாங்கம் ஏதோ சட்டத்தின் மூலம் தடை செய்து விட்டது. அது ஒரு பெருமாருதல்தான். இன்றும் சில நாகரிக நாடுகளிற்கூட இந்தப் பரத்தைமை முறை போற்றி வளர்க்கப்படும்போது, வாழையடி வாழையாக வாழ்ந்த நம் நாட்டில் அது மக்களால் சாய்க்கப்பட்டது என்பதைக் காண யார்தான் மகிழாதிருக்க முடியும் !

மற்றும் அரசாங்கத்தார் இப்போது பெண்களது முன்னேற்றம் கருதும் சங்கங்களை ஊர்தோறும் அமைத்து மகளிரின் முன்னேற்ற வளர்ச்சியில் கருத்திருத்துவதாக அறிகின்றேன். சென்னையில் அதற்கென ஒரு தனி நிலையமும் அதன் பல கிளைகளை நாட்டிலும் நிறுவி, தக்கவரை அமைத்துப் பெண்கள் முன்னேற்றத்துக்கு 15ம் நாட்டு அரசாங்கம் பாடு படுவதைக் காண உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/99&oldid=600949" இலிருந்து மீள்விக்கப்பட்டது