கி.வீரமணி 10 5 அன்னியன் சுரண்டிச் செல்லும் நாடு "தற்குறி”த் தன்மை வாய்ந்த நாடு தமிழ்நாடு! 'தமிழன், ஏன் சமுதாயத்தில் 4-ஆவது 5-ஆவது ஜாதியாக இருக்க வேண்டும்? தமிழ் மகள் ஏன் சூத்திரச்சியாய், தாசியாய், அன்னியனுக்கு வைப்பாட்டியாய் இருக்கவேண்டும்? தமிழன் ஏன் 100-க்கு 90-பேர் தற்குறிகளாக இருக்கவேண்டும்? ஏன் பியூன் உத்தியோகத்திலும், தெருக் கூட்டும் வேலையிலும், கக்கூசு எடுக்கும் வேலையிலும் 100-க்கு 100 பேர் தமிழர்களாகவே இருக்கவேண்டும்? தமிழ்நாட்டில் எல்லாச் செல்வங்களும் இருந்தும் தமிழன், ஏன் இந்த நாட்டில் பிழைப்பு இல்லாமல் வெளிநாட்டுக்குக் கூலிகளாகப் போகவேண்டும்? தமிழ்நாடு ஏன் மற்ற எல்லா நாட்டாலும் வந்து சுரண்டிக் கொண்டு போகும் கேள்வி கேட்பாரற்ற மடமக்கள் நாடாக. இருக்கவேண்டும்? இந்த நிலை உள்ள நாடு உலகத்தில் எங்காவது இருக்கிறதா? இந்தியாவில் எங்காவது இருக்கிறதா? தமிழர்களுக்கு இது தெரியவில்லை என்றால், தமிழ்த் "தேசிய"வாதிகளுக்கும் இது தெரியவில்லை என்றால், தமிழனுக்கு மானம், அறிவு, தேசாபிமானம், சமூகாபிமானம், மொழி அபிமானம் இருப்பதாக எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும்?" "சமுதாயத்தில் தமிழன் ஒரு வகுப்பாக இல்லையே, இதற்கு என்ன காரணம்? தமிழனே, தமிழனை இழிவுபடுத்துகிறான்; ஒருவர் தொட்டதை ஒருவர் சாப்பிடுவதில்லை; ஆசாரி வீட்டில் செட்டியார் சாப்பிடுவதில்லை; செட்டியார் வீட்டில் ஆசாரி சாப்பிடுவதில்லை. கோமட்டிச்செட்டியார் வீட்டில் வாணியச் செட்டியார் சாப்பிடுவதில்லை, வாணியச் செட்டியார். வீட்டில் மேல்கண்ட மூவரும் சாப்பிடுவதில்லை. இவர்கள் நால்வரும் முதலியார், பிள்ளை. நாயக்கர் வீட்டில் சாப்பிடுவதில்லை. அவர்களும் இந்த நால்வர் வீட்டில் சாப்பிடுவதில்லை. அன்றியும் இவர்கள் இத்தனை பேரும் ஒருவருக்கொருவர் கீழ் ஜாதி-மேல் ஜாதி என்று பேசிக்கொள்ளப்படுகிறார்கள். தமிழர்களில் பாடுபடும் மக்கள் எல்லாம் கீழ் ஜாதியாக
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/12
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை