16 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி அவரது பண்பாட்டுப் புரட்சிக்கான அருமையான விளக்கம் (raison detre) "ஒரு மனிதனை அவனிருக்கும் சிறையிலிருந்து விடுதலை செய்து கொண்டு வரவேண்டும் என்று விரும்பும் எவரும், முறைப்படி அவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அதேவழியில், அதே வழியின் மூலம்தான் வெளியே கொண்டுவரவேண்டும். அதைவிடுத்து வேறு வழிகளில் வந்தால் அந்த விடுதலை அவனுக்கு நீடிக்குமா? நிலைக்குமா?” எனவேதான் அவரது போர் முறைகளும், அவர் நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சிக்கு அவர் வகுத்த வியூகங்களும் தனித்தன்மை வாய்ந்தனவாகவே அமைந்தன! அறிஞர் அண்ணா அவர்கள், "பெரியாரின் போர்முறை விசித்திரமானது. முன்னால் உள்ள எதிரிகளுடன் போர் புரிவது மற்றவர் போர் முறை. எதிரிகளின் மூலபலத்தையே பெரியாரின் போர் முறை. முறியடிப்பதுதான் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் தாக்கித் தகர்ப்பது அவரது போர் முறை" என்றார். இது ஒரு சரியான விளக்கமாகும். அவரது போர்முறை பல்வேறு அரசுகளிடம் பெரும் வெற்றிகளை ஈட்டித் தந்துள்ளது என்பது உண்மையான சமூகப்புரட்சி வரலாறாகும். சூத்திரர் என்பதற்குப் பதிலாகத்தான் திராவிடர் என்கிற பெயர் திராவிடர் என்ற இனப் பெயரின் அடிப்படையில் கழகம் கண்டதற்குத் தந்தை பெரியார் கூறும் காரணம் வரலாற்று ரீதியானதும் பண்பாட்டு ரீதியானதுமாகும். அதுபற்றி தந்தை பெரியார் இதோ கூறுகிறார்: "பிராமணர், பிராமணர் மகாசபை வைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பெருமையும்,
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை