பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சமூகநீதி என்னும் நெம்பு கோல்! 1927 முதல் வகுப்புவாரி உரிமை அரசு ஆணை (‘கம்யூனல் ஜி.ஓ') சென்னை மாநிலத்தில் அமலில் இருந்ததால்தான், 'பள்ளத்தில் வீழ்ந்திருந்த மனிதர் எல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்ளும் நிலை' ஏற்பட்டது! ஆயிரமாயிரமாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட, ஊனப் படுத்தப்பட்ட பலகோடி மக்களுக்குக் கிடைத்த ஊன்றுகோல் அந்த வகுப்புரிமை ஆணை! பல காலப் பட்டினிப் பட்டாளத்திற்குப் பரிமாறப்பட்ட பந்தி விருந்து அது! அதில் பெரியாரின் பங்களிப்பு மிகவும் அதிகம்! அவர்கள் அரசியலை விட்டு வெளியேறி, சூளுரைத்து, சுயமரியாதை இயக்கம் காணுவதற்கே அவர் காங்கிரசு கட்சிக்குள் நடத்திய பலமுனை உள்ளிருப்புப் போராட்டங்கள் தானே காரணம்? 1950-இல் அந்த வகுப்புரிமை - சமூகநீதி - ஆணையை இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் உள்ள சில விதிகளைச் சுட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமதி சண்பகம் துரைராஜன் என்ற 'உயர்ஜாதி'ப் பெண், வகுப்புரிமை சட்டம் செல்லாது என்று வழக்குத் தொடுத்தார். அரசியல் சட்ட ஆறு வரைவாளர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்களே, சென்னை உயர்நீதி மன்றத்தில் நேரில் வழக்கில் ஆஜராகி, வாதாடினார். உயர்நீதிமன்றம் அவ்வாணையைச் செல்லாது என்று பெரும்பான்மை தீர்ப்புமூலம் - (ஜஸ்டிஸ் திரு. என். சோமசுந்தரம் மட்டும் செல்லும் என்ற தனி தீர்ப்பு (dissenting Judgement) வழங்கினார்.) அறிவித்தது.