பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 27 அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தைகளாக க்கவேண்டுமென்று பாடுபடுவாளோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு நான் பார்ப்பனர்களிடமும் மற்ற வகுப்புகளிட்மும் காட்டிக்கொள்ளும் ('விடுதலை'-1.1.1962). உணர்ச்சியாகும்" தந்தை பெரியாரின் இந்தத் தாய் உள்ளத்தை என்னென்று சொல்வது! இதைப் புரிந்துகொள்ளாமல் நாத்தழும்பேற அவரைத் திட்டியவர்கள், தாக்கியவர்கள் உண்டு. ஆனால், அதுகுறித்து அவர் என்றைக்கும் அஞ்சியதுமில்லை கெஞ்சியதுமில்லை. தந்தை பெரியார் சமூகத் துறையில் இந்தச் சமூகச் நீதிக் கொள்கைக்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தராவிட்டால் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்னவாகியிருக்கும்? குறிப்பாக ஒன்றை எடுத்துக்காட்ட முடியும். 1929-ஆம் ஆ ஆண்டுவரை. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப் பட்டவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடமளிப்பதில்லை. அவர்கள் இந்து மதத்தைச் சாராதவர்கள்; அவர்களுக்கு ஒரு இந்து அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்லூரியில் இடமில்லை என்று கூறிவிட்டனர். அதனை எதிர்த்து "குடிஅரசு" எழுதியது - தந்தை பெரியார் போராடினார். கடைசியில் தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்களே என்று ஒரு தீர்ப்பு நீதிமன்றத்தில் பெறப்பட்டுத் தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கல்லூரியில் படித்த காரணத்தால்தான் ஒருவர் பட்டதாரி ஆனார். தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய தேர்வில் உயர்நிலை அதிகாரி ஆனார்; பின் மாவட்ட ஆட்சியர் ஆனார்; அரசுச் செயலாளர் ஆனார்; தலைமைச் செயலாளர் ஆனார்; ஆளுநருக்கு ஆலோசகர் ஆனார்; அதன்பின் மத்திய தேர்வாணையக்குழு உறுப்பினர் ஆனார்; உச்சக்கட்டமாக ஒரு மாநிலத்தின் ஆளுநரும் ஆனார்.