6.மொழியில் மறுமலர்ச்சி 1938-39-இல் திரு. சி. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பிரிக்கப்படாத சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சராக வந்தபிறகு, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாகத் திணித்தார். அதன் விளைவாக "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என்ற முழக்கத்துடன் இந்தி எதிர்ப்பு இயக்கம் வெடித்துக்கிளம்பியது! புயலெனக் கிளம்பிய அந்த எதிர்ப்பு ராஜாஜி அமைச்சரவை பதவி விலக ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 1940-இல் கட்டாய இந்தி ஆணை அன்றைய அரசால் திரும்பப் பெறப்பட்டது. பிறகும் 1947-48ல் உயர்நிலைப்பள்ளிகளில் கட்டாய இந்தி முன்போல இல்லாவிட்டாலும், மறைமுகத் திணிப்பாக நுழைய முயன்றதும் தோல்வியில்தான் முடிந்தது. 1965-60 அதன் தொடர்ச்சியான விளைவுதான், மொழிப்போராக அரசியல் உத்வேகத்துடன், தமிழ் மாணவர்களால் முன்னெடுத்து நடத்தப்பட்ட கிளர்ச்சியாகியது; வன்முறைகளும்கூட அதில் வெடித்தது தவிர்க்க இயலாததாகிவிட்டது. அன்றைய முதல் அமைச்சர் திரு.எம். பக்தவத்சலம் அவர்கள் கோட்டையில் இருந்துகொண்டு, மாணவர் பிரதிநிதிகளைச் சந்திக்க மறுத்த ஒரு முடிவு, ஒரு தீப்பொறி, பெருநெருப்பாய் மாறியது. அன்றைய (காங்கிரஸ்) அரசு தவறான அணுகுமுறை என்ற 'பெட்ரோலை' ஊற்றித் தீயை அணைக்க முயற்சித்தது! அதற்கு அக்கட்சி மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை