கி.வீரமணி 31 தந்தை பெரியார் நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சிக்கு இந்தச் சுயமரியாதைத் திருமணம் செல்லுபடிச் சட்டம் ஓர் அரசியல் அங்கீகாரம் ஆகும். இந்த நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய வரலாற்று, அதிசயங்கள் உள்ளடங்கியுள்ளன. 1.பகுத்தறிவாளரான ஒரு தலைவரை (தந்தை பெரியாரை) வழிகாட்டியாக, ஆசானாகக் கொண்டு, அவருக்குத் தமது அமைச்சரவையே காணிக்கை என்று பிரகடனப்படுத்தியதுடன், அவரது சீடர்களும் அதிகாரபூர்வமாக - அதுவும் ஜனநாயக் நெறிமுறையில் மக்களின் பேராதரவுடன் - ஆட்சியைப் பெற்ற ஓர் அதிசயம்!. 2.இரண்டாவது, அந்த ஆசான் வாழ்நாளிலேயே அந்த லட்சிய வெற்றிக்கனியை அவர் தம் சீடர்கள் தர, ஆசான் பெற, அமைந்தது மற்றொரு மிகப்பெரிய அதிசயம் ஆகும்!. மிகுந்த அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த முதல்வர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் "நான் அறிந்த வரையில், உலக வரலாற்றில் தனது கொள்கை வெற்றியினைத் தன் வாழ்நாளிலேயே கண்ட ஒரே தலைவர் தாங்கள்தான்.எவ்வித மனக்குறையுமின்றித் தாங்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டது மேலே சுட்டிக் காட்டிய கருத்துக்கான ஆதாரம் அல்லவா? (இந்தச் சுயமரியாதைத் திருமணம் பற்றி பிறகு விளக்குவோம்.) மொழிக் கிளர்ச்சி என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பு ஆழமாகவே இருந்ததற்குத் தந்தை பெரியார் அவர்கள்தான் மூல காரணம் ஆவார் என்பதைக் கூறிய முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திரு. சீத்தாராம் கேசரி அவர்கள், தந்தை பெரியார் அவர்கள்பால் மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டவர். அவரது சமூகப் புரட்சியின் மூலம் தான் இந்தியாவில் இரண்டாவது சுதந்தரம். ஒடுக்கப்பட்ட
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை