கி.வீரமணி 33 சிறுபான்மை எண்ணிக்கை (1) டாக்டர் அம்பேத்கர், (2) மற்றொருவர் முகமது சாதுல்லா.) கலாச்சாரம் பரவ நால்வரும் சமஸ்கிருதக் வேண்டுமென்பதில் ஒன்றுபட்ட கருத்துள்ளவர்கள். அதனால்தான் இந்திய அரசியல் சட்டத்தில் ஆட்சி மொழியாக இந்தி இருக்கவேண்டும் என்ற சட்ட விதியைப் புகுத்தி எழுதும்போது, எந்த மாதிரி இந்தி என்பதைத் திட்டவட்டமாக குறிப்பிட்டு எழுதினர். Deva Nagari Script "தேவ நாகரி எழுத்தில் உள்ள இந்தி" ஆட்சி மொழியாக பயன்படுத்தப்படல் வேண்டும் என்று எழுதினர். 'தேவ பாஷை' என்று சமஸ்கிருதத்தில் அவர்கள் அழைப்பதால் அதன் எழுத்துக்கள் தேவ-நகரி - தேவ- கடவுள் எழுத்துகள் என்றே கூறி சமஸ்கிருத மயத்தை மிகவும் நாசூக்காகச் செய்தனர். காந்தி அடிகள் கூறிய இந்தி அல்ல அது. இந்துஸ்தானி அல்ல - இந்துஸ்தானி என்பதில் உருதுமொழிக் கலப்படம் உண்டு. இந்துஸ்தானி என்பது போர் வீரர்கள் பாசறையில் பேசப்பட்ட மொழி: உருது கலந்தது. ஆனால், மிகவும் சாமர்த்தியமானமுறையில் - அந்த இந்தி புகாமல் சமஸ்கிருத எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட தேவநாகரியைப் 'புகுத்தினர் என்பதைத் திரு. சீத்தாராம் கேசரி அவர்களிடம் நான் விளக்கியபோது; அதனை அப்படியே "உண்மைதான்; சரியாகச் சொன்னீர்கள், இந்த விளக்கத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார். அவர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட பீகார்க்காரர் - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்! எனவே, தந்தை பெரியார் அவர்கள் இந்தி மொழித் திணிப்பை ஒரு பண்பாட்டுப் படையெடுப்பாகக் கருதித்தான் எதிர்த்தார். இதை அவர்களே பலமுறைகளில் பேசியும் எழுதியும் வந்துள்ளார்! பெரியார் கேட்போம். மனவேதனைப்பட்டுப் பேசியுள்ளதைக்
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை