34 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி "இந்தியா.. தமிழனுக்கு எங்காவது உணர்ச்சி இருக்கிறதா?" மொழி உணர்ச்சியைவிட சமுதாய உணர்ச்சியே மானத்தையும் அறிவையும் உருவாக்க தமது இன மக்களுக்கு வேண்டும் என்ற கவலைதான் அவரை இயக்கியது. அவருக்கு அதில் அரசியல் பார்வை துளியும் இல்லை என்பது ஈண்டு நோக்கத்தக்கது. பார்ப்பனர்களின் சமஸ்கிருதமயத்தால் தமிழர்களின் பெயர்கள் சமஸ்கிருதமயமாயின. ஊர்ப் பெயர்கள் வழிபாட்டு சமஸ்கிருதமயமாக்கப்பட்டன. சமஸ்கிருமாயிற்று. முறை தந்தை பெரியாரின் பிரச்சாரத்தால், இயக்கத்தால் இதில் பெரும் மாறுதல்கள் நிகழ்த்தப்பட்டன. தமிழில் பெயர்கள் வைக்கத் தலைப்பட்டனர். அறிவுக்கொடி என்றும், அன்புமணி என்றும், தமிழ்மணி என்றும் பெயர்கள் நடைமுறைக்கு வந்தன. இராமய்யா அன்பழகன் ஆனதும், நாராயணசாமி நெடுஞ்செழியனானதும், சோமசுந்தரம் மதியழகன் என்றும், சாரங்கபாணி வீரமணி என்றும் பெயர் மாற்றம் செய்து கொண்டதும் மொழிப் புத்துணர்ச்சியின் விளைவால்தான். சமஸ்கிருதமய மாக்கப்பட்ட ஊர்ப் பெயர்களை மீட்கும் எழுச்சியும் ஏற்பட்டது. மாயவரம் மயிலாடுதுறை ஆனது ; இந்த வகையில்தான். ஸ்ரீ 'திரு' ஆனதும், அக்ராசனாதிபதி 'தலைவர்' ஆனதும், நமஸ்காரம் 'வணக்கம்' ஆனதும், வந்தனோபசாரம் 'நன்றி' ஆனதும், உபந்யாசம் 'சொற்பொழிவு' ஆனதும், தந்தை பெரியார் கொளுத்திய பண்பாட்டுப்புரட்சியின் விளைவால்தான். இலக்கியத் துறையிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. புராணங்களை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தவர்கள் மறுமலர்ச்சி சிந்தனையோடு எழுதத் தலைப்பட்டனர். மணிபிரவாள நடை மறந்துபோய் நல்ல தமிழ் நடை உருவாயிற்று.
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/41
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை