பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 35 "சுப்பிரமணிய துதியமுது" பாடிய கனகசுப்புரத்தினம் தந்தை பெரியாரின் தாக்கத்தால் புரட்சிக்கவிஞராக முகிழ்த்து எழுந்தார். தமிழ் மொழியில் தந்தை பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தம் இன்றைக்குச் சட்ட வடிவம் பெற்றுவிட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்றுள்ளது. தந்தை பெரியார் நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சியின் போர்ப்படைத் தளபதிகளாக இலக்கியம், கலை, நாடகம் ஆகிய துறைகளில் பற்பலர் உருவாயினர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தந்தை பெரியார் தம் பண்பாட்டுப் புரட்சியை இலக்கியத்தில் வடிவெடுத்துக் கொடுத்தார். அறிஞர் அண்ணா அவரது ஆற்றல்மிகு தளபதியாக ஆகி, பெரியார் நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சிக்குப் பெரிதும் துணைநின்றார். அவர் துவக்கிய 'விடுதலை' நாளேட்டின் ஆசிரியராக ஈரோட்டில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றி, பிறகு அய்யா அவர்களுடைய ஆசியுடனும், ஆதரவுடனும் தனியே 'திராவிட நாடு' என்ற வார இதழைத் துவக்கி, இளைய தலைமுறையை இக்கொள்கைக்கு ஈர்ப்பதில் பெரும் பங்காற்றினார். சொல்லேருழவராக, சொக்க வைக்கும் எழுத்துச் சிற்பியாக, சிறுகதை, நெடுங்கதை மன்னராக, பண்பாட்டுப் புரட்சி கலைத்துறையில் பரவினால் பல மடங்கு மக்களைச் சென்றடைந்து சிந்திக்க வைக்கும் என்று கருதி, அறிஞர் அண்ணா பல நாடகங்களை எழுதி அவரே-நடித்தார். தந்தை பெரியார் அவர்கள் தலைமையிலும் நடத்தினார். அவ்வாறு அண்ணா எழுதி நடித்த நாடகங்கள் 1.சந்திரோதயம் 2. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் 3. நீதி தேவன் மயக்கம்.