பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 39 மத ஆதிக்கம் இல்லை 1 சாதி மதஞ்சார்ந்த 'வாழ்வை Secularise - மதச்சார்பற்றதாக ஆக்குக', என்ற பகுத்தறிவு, மனிதநேய வளர்ச்சிச் சிந்தனை அடிப்படையில்தான். மதங்கள் ஆதிக்கம் செலுத்தாத மணமுறையான சுயமரியாதைத் திருமணத்தைக் கண்டார் பெரியார்! (சுயமரியாதை) மணப்புரட்சி என்பது அடிப்படையில் ஒரு மாபெரும் மனப் புரட்சியும் ஆகும்! (It is a New Concept of Secularisation of Marriage System) அதுபோலவே சுயமரியாதை சுதந்திர, தன்மானக் குடும்பத்தவரின் வாழ்வில் பொங்கல் விழா என்பதும் ஒரு மதங்கடந்த மகத்தான உழைப்புத் திருவிழா! திராவிடர்க்கு ஒரு ஆண்டு! திராவிடருக்கு என ஒரு ஆண்டு இல்லையா? அதன் துவக்கம் எப்போது என்ற கேள்விக்கு அருமையான விடை தரும் விழாதான் பொங்கல் விழா! தீபாவளியைப் பிரபலப்படுத்தும் பண்பாட்டுப் படையெடுப்பாளர்கள் பொங்கலைப் பின்னுக்குத் தள்ளுவது ஏன்? - இந்தக் கேள்விக்கு உண்மைத் தமிழ் பண்பாட்டுப் போராளிகள் விடை காண்பர். ஆரியக் கற்பனை, ஆபாசக் களஞ்சியம், அறிவை அண்டவிடாத அசிங்கம் - 'தீபாவளி' தமிழ்ச் சொல்கூட அல்ல! தமிழனுடையது என்றால், அது தமிழ்ச் சொல்லாக அல்லவா இருக்கும்? காபி (Coffee) என்பதை நாம் குடித்தாலும்கூட, அது அன்னியரால் இறக்குமதி செய்யப்பட்டு, நம்மிடையே புகுந்த