42 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி மாநாடு விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறது!" என் 6.1.2001 அன்று மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்பதை வலியுறுத்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் பகுத்தறிவாளர் கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் விழாவிலும் (29.4.1990) முதல் அமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டது. ஆனால், செயலுக்குத்தான் வரவில்லை. நாரதன் என்கிற ஆண் கடவுளுக்கும் கிருஷ்ணன் என்கிற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் தமிழ் ஆண்டுகளாம். ('அபிதான சிந்தாமணி' பக்கம் 1932) பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கிரச,ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷீ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய.... இவ்வாறு 60 வருடங்கள். ஒரு பெயர்கூட தமிழ் கிடையாது. ஆனாலும் இவை தமிழ் ஆண்டுகளாம்! பிறப்பும் ஆபாசம்! பெயரும் தமிழில் இல்லை. தமிழும், தமிழரும், அவர்களின் பண்பாடும் எந்த அளவு சமஸ்கிருதமயமாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒன்று போதாதா? தமிழர் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. கல்யாணம் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தமானது; கிரகப் பிரவேஷம் 'புதுமனை புகுவிழா' ஆனது; சஷ்டியப்த பூர்த்தி 'மணி விழா' ஆனது; உத்திரகிரியை "நீத்தார் நினைவு' போற்றும் நாளானது மட்டுமல்ல; இவற்றுக்கெல்லாம் புரோகிதர்களை அழைத்து சமஸ்கிருதத்தில் நடத்தும் மூடச் சடங்குகளுக்கும் மூடு விழா நடத்தப்பட்டது என்றால் அது தந்தை பெரியார் நிகழ்த்திய தலைகீழ் சமூகப் புரட்சியின் அறுவடையாகும்.
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/49
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை