48 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி இதுதான் தமிழிசைக் கிளர்ச்சி என்றால், இதற்கு (அய்க் கோர்ட் ஜட்ஜுகள், அய். சி. எஸ். கலெக்டர்கள் முதல்) இத்தகை 'பெரியவர்கள்" விரோதம் தான் இப்பெரியோர்களுக்கும், தமிழிசை கிளர்ச்சி இயக்கத்திற்கும் எதற்கு ஏற்படவேண்டும், என்று யோசித்தால் இது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை என்றே தோன்றும்” ('குடிஅரசு' 293.1944 தலையங்கம்) என்று அலை அலையாக ஆதங்கத்தோடும், தன்மான உணர்ச்சியோடும் பொழிந்து தள்ளுகிறார் தந்தை பெரியார். ம் "8-4-44-ல் பட்டுக்கோட்டை நாடியம்மன் உற்சவத்திற்காக மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் கச்சேரி செய்ய வந்தார். அப்பொழுது திருவாளர் நாடிமுத்துப்பிள்ளை, போலீஸ் ஜில்லா சூப்பிரிண்டண்ட், டிப்டி கலெக்டர், ஸ்பெஷல் கலெக்டர், சப்மாஜிஸ் டிரேட், டிஸ்டிரிக்ட் முன்சீப் இன்னும் இவ்வூர் பிரபலஸ்தர்களும் வீற்றிருந்தார்கள். அப்பொழுது அவ்வூர் சுயமரியாதை சங்க செயலாளர் திரு. மாப்பிள்ளையன் தமிழில்தான் பாட வேண்டும் என்று சொன்னார். அவர் தமிழில் தெரியாது என்றார். மீண்டும் பாடினார். நிறுத்து என்று மறுபடியும் சொன்னார். 5-4-44 முதல் நடைபெற்றுவரும் நாடியம்மன் கோயில் திருவிழாவில் நடைபெற்ற பாட்டுக் கச்சேரிகளில் நடத்திய தமிழ் இசைக் கிளர்ச்சியேயாகும். தமிழில் பாட மறுத்ததால் 8-444-ல் நடைபெற்ற மகாராசபுரம் விஸ்வநாத அய்யர் பாட்டுக் கச்சேரி கடும் வாதப் பிரதிவாதங்களுக்கிடையில் முக்கால் மணிநேரம் நிறுத்தப்பட்டுவிட்டது. உடனே டிப்டி கலெக்டர், தமிழில் பாடும் என்று பாட்கரைச் சொன்னார். பிறகு பாடினார். தமிழ்ப்பாட்டு பாட தெரியாது என்றவருக்கு எப்படி, பாடத் தெரிந்தது - பார்த்தீர்களா?" தமிழ்நாட்டில் தமிழில் பாடவேண்டும் என்று வற்புறுத்த வேண்டிய அவசியம் இருந்தது என்பதும், அதனை தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்தான் சாதித்துக் காட்டியது என்பதும் வரலாற்றுக் கண்ணாடியாகும்.
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/55
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை