பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 49 CE என்ன? பெரியார் பேசுகிறார் "இன்றைய நம் நிலை என்ன? முதலாவது சமுதாயத்தில் நாம் கீழான நிலையில் இருக்கிறோமா இல்லையா? இந்தக் கீழான நிலை ஏழைகளுக்கும், கயவர்களுக்கும் இருந்தால் நமக்குக் கவலையில்லை (ஏனெனில் இது தனி உடைமை நாடு). ஆனால் கோடீசுவரரும், கோணாத கை கொடை வள்ளலும், மிக்க மதிவாணருமான இராஜா சர் அண்ணாமலை அவர்களும், பேரறிஞரும், மலையாடும்படியான வாயாடிகளும், கருத்தாளர்களும் மெச்சும் மதி அரசர் சர் சண்முகம் அவர்களும், நம் சமுதாயத்தில் 4-ஆம் ஜாதி, 5-ஆம் ஜாதியாக மதிக்கப்படவும். அவ்வாறே பெரிதும் நடத்தப்படவும், காரணம் ஏன் நடத்தப்படவேண்டும்? சம மனிதனாய்க் கருதப்படாததற்கு இவர்களிடம் உள்ள கறைகள் என்ன? குற்றம் என்ன? என்று கேட்கிறேன். இந்தக் கொடுமை இன்றா நேற்றா? இந்நிலையில் இவர்களுக்குள்ள பொருள், செல்வாக்கு, மதி, திறமை, ஊக்கம், உணர்ச்சி ஆகியவை உண்மையில் எதற்காகச் செலவிடப்பட்டு வரவேண்டும்? எதற்காகப் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்? இப்படிப்பட்டவர்கள் பிறந்த நாட்டிலே, இவர்கள் காலத்திலே மனித சமுதாயத்துக்கும் (ஏன்) இவர்களுக்குமே, சமுதாயப்பிறவி இழிவும், குறைபாடும் நீக்கப்படவில்லையானால், நீக்கப்பட இவர்கள் உழைக்கவில்லையானால், நீக்கப்பட இவர்களது அறிவு, ஆற்றல், உணர்ச்சி, ஊக்கம் செலவழிக்கப்பட வில்லையானால் மற்றும் வேறு யாருடைய காலத்தில் நாம் எதிர்பார்க்க முடியும், என்று 57 கேட்கிறேன்... என் ன்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். "என்மீது ஒரு சிலர் முனிவு கொள்ளலாம். ஆத்திரப்பட்டு வஞ்சினம் கூடக் கூறலாம்; அதை நடத்துவிக்கவும் முனையலாம். இவற்றால் பொதுநலம் என்ன ஏற்படக்கூடும்? தனி நலம்தான் என்ன ஏற்படக்கூடும்? இப்பெரியார்களிடத்தில் இந்த விண்ணப்பம் கொடுக்க எனக்கு உரிமை இல்லையா?" என்று வினவுகிறார்.