பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 51 நடிப்பதினால் அனுபவிப்பதால் மூட நம்பிக்கை, ஒழுக்க ஈனம், கட்டுத்திட்டமற்ற காம உணர்ச்சி, கண்ட மாத்திரத்தில் காம நீர் சுரக்கும் படியாகப் பெண் மக்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளுதல் முதலியன பிடிபடுவதல்லாமல் வேறு என்ன ஏற்படுகிறது?"... ஆகவே, வாலிபர்களே, நீங்கள் ஆண்களும், பெண்களும் முன்வந்து இந்தக்கேட்டை ஒழிக்கவேண்டும், நாடகங்களில் போய் உட்கார்ந்து கொண்டு முன்சொன்ன காதல் வரும் சந்தர்ப்பங்கள் வரும்போது, "வெட்கம் வெட்கம், மானங்கெட்ட பெண்கள் தாம் இதைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். மானமும் ஒழுக்கமும் உள்ள பெண்கள் இந்த நாடகங்களை எட்டிக்கூடப் பார்க்கமாட்டார்கள்" என்றும், மூடநம்பிக்கை வரும் சந்தர்ப்பங்களில் "வெட்கம் வெட்கம், பகுத்தறிவற்றவர்களும், காட்டுமிராண்டிகளும்தான் இந்தக் காட்சிகளைக் காண வருவார்கள். அறிவும் மானமும் உள்ளவன் இதைத் திருத்தத்தான் முற்படுவான்" என்றும் சொல்ல வேண்டும். அதுபோலவே இசையரங்குகளிலும் பஜனைப் பாட்டுகள் வரும்போது அவை காதுகளில் கேட்காதபடி "யாயாயாயாயா" என்று கூப்பாடுபோட்டு, அந்தச் சப்தம் மற்றவர்கள் காதுகளில் கேட்காமல் இருக்கும்படிச் செய்யவேண்டும். யுத்தத்தின் காரணமாக நமது சர்க்கார் ரேடியோவில் ஜப்பான், ஜெர்மன் பேச்சுகள் வரும்போது, வேறு யாரோ ஒருவர் அப்பேச்சுகள் நம் காதுகளில் விழாமல் இருப்பதற்கு ஆக 'பாயாயாயா' என்று சொல்லச் செய்கிறார்கள் அல்லவா, அதுபோலத்தான் நானும் சொல்லுகிறேன்." "நாம் நம் சமுதாய முன்னேற்றத்திற்கு எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுடன், எவ்வளவு நாள்களாக, எவ்வளவு பாடுபட்டு வருகிறோம்? அந்தப் பலன்கள் நாம் செய்த சிறு காரியத்தையும் கெடுக்கவும், யாரோ சுயநலக்காரர் சுரண்டுவதற்கும்தானா பயன்பட வேண்டும்.? நமக்கு ஒருவர் உதவி செய்யாவிட்டாலும், நம் காரியம் கெட்டுப் போகாமல் இருக்கும்படியாகவாவது