52 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி பார்த்துக்கொள்ள நமக்கு உரிமை இல்லையா, என்று கேட்கிறேன். இந்தப் பஜனைப் பாட்டும், இந்தப் புராண நாடகமும்இருக்கும்வரை நம் முட்டாள்தனமும் இழிவும், மானமற்ற கீழ்மையும், ஒழுக்க ஈனமும் ஒழிக்கப்பட முடியவே முடியாது என்பேன்." எனவே, உங்கள் பங்கு என்ன? இந்தச் சமயத்தில் சும்மா இருக்க,வேடிக்கை பார்க்க உங்களுக்கு மனம் வருகிறதா? இப்போது சும்மா இருந்து விட்டுப் பின்னால் நீங்கள் வாழ்ந்துதான் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் சரீரம் பெருத்தால் போதுமா? உங்கள் தனிப்பட்ட வாழ்வு, வாயில் சீட்டி அடித்துக்கொண்டு கைப் பிரம்பைச் சுழற்றிக்கொண்டு உல்லாச நடை நடக்கும்படியாக இருந்தால் போதுமா? நாம் இருக்கும் நிலையை நிர்வாணமான கண்ணைக்கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள்; அப்பொழுது தெரியும், உங்கள் உடைமை என்ன என்பது! வாலிபர்களே, இன்னமும் சில நாள் நான் வேலை செய்ய உற்சாகத்தைக் கொடுக்கிறீர்களா? அல்லது, இந்த அக்கிரமங்களைப் பார்த்து மனமுடைந்து உட்காரச் செய்கிறீர்களா? என் முயற்சி, என் உற்சாகம் - ஏன்? என் வெற்றிகூட உங்கள் கையில் இருக்கின்றன. இதுவரையிலும்கூட உங்கள் கையில்தான் இருந்து வந்தன. என்ன சொல்லுகிறீர்கள்?" (தந்தை பெரியார் தமிழர், தமிழ்நாடு, தமிழர் பண்பாடு) தந்தை பெரியாரின் எழுச்சி உரையில் கலையால் தமிழினம் எவ்வாறு வீழ்ச்சி பெற்றது என்பதை எடுத்துக்காட்டி, அதில் தலைகீழ் மாற்றம் வரவேண்டிய உணர்ச்சியை ஊட்டுகிறார் அதில் ஆத்திரமும் ஆவேசமும் கரை புரள்கிறது! அந்த அளவுக்கு இந்த இன மக்கள்மீது அவருக்கு அக்கறையும், கவலையும்! இசையிலும் வருணம் இசையிலும்கூட வருணத்தை ஜாதியைப் புகுத்தியுள்ளனர் பார்ப்பனர்கள்,
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/59
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை