பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 55 உரிமைகள் வேண்டும் என்று அவரிடம் கேட்கப் பட்டபோது, ஆணுக்கு என்னென்ன உரிமைகள் எல்லாம் உண்டோ அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்று நெஞ்சில் தைக்குமாறு கூறினார். தமிழர் (திராவிடர்) திருமணம் என்றால் என்ன. என்ற கேள்விக்குத் தந்தை பெரியார் கூறும் பதில்: "புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ள உரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும், உள்ள ஒரு இனத்திற்கு ஒரு நீதியான மனுநீதி இல்லாமல் வாழ்க்கையில் கணவனும், மனைவியும் சரி சம உரிமை உள்ள நட்பு முறை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் திருமணம்" என்று விளக்கம் தந்துள்ளார் தந்தை பெரியார் ('விடுதலை' 14.3.1950) கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக, துணைவர்களாக வாழவேண்டுமேதவிர, எஜமான் - அடிமைகளாக வாழக் கூடாது என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, சாதி, மத, சடங்கு, சம்பிரதாயங்களுக்கு இடமின்றி எளிமையாக, சிக்கனமாகச் செய்யும் திருமண முறையான சுயமரியாதைத் திருமணம் என்பது தந்தை பெரியார் அவர்கள் நிகழ்த்திய பெரிய பண்பாட்டுப் புரட்சியாகும்! சுயமரியாதைத் திருமண மேடைகளில் தந்தை பெரியார் எடுத்துவைத்த கருத்துகள், மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பிற்காலத்தில் சட்ட வடிவமாயின. ஏன்? சுயமரியாதைத் திருமணமே சட்ட அங்கீகாரம் பெற்றது. அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சரான நிலையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, இதற்கு முன்பு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும்கூடச் செல்லுபடியாகும் என்று சட்டம் செய்தார். இது 2011968 சென்னை அரசிதழில் வெளியிடப்பட்டுச் சட்ட வடிவம் பெற்றது.