பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 65 பதவியாளர்களையும் காப்பாற்ற அவர் 'சுமந்த சிலுவைகள்' இப்படிப் பலப் பல. இதில் ஒரு சுவையான சம்பவம், இதில் யாருக்கு ஆதரவாகப் பேசித் தந்தை பெரியார் தண்டனை பெற்றாரோ அந்த ஆர்.எஸ்.மலையப்பன் அவர்களைப் பெரியார் பார்த்ததில்லை பழகியதில்லை. யாரைக்கண்டித்தாரோ அவர்களையும் அறியார். தனிப்பட்ட வெறுப்பு ஏதும் அவரிடத்தில் இல்லை. அவரது பார்வை பொதுநலப் பார்வை மட்டும்! அதனால் தான் கவியரசு கண்ணதாசன் 'நீதி மன்ற நீதிக்கும் நீதி சொல்வார். நெறி கெட்டு வளைந்ததெல்லாம் நிமர்த்தி வைப்பார்' என்று வெகு ஆழமாக கொள்ளை இன்பம் குலவு கவிதை யாத்தார்! போராட்டக் களத்திலும் பொறுப்பான ஆணைகள் தந்தை பெரியார் தான் மட்டுமல்ல; தம் இயக்கத்தால் நடத்தப்படும் போராட்டங்களில் கூட இயக்கத் தோழர்கள் எவ்வளவு கட்டுப்பாட்டுடனும் பொறுப்புடனும் ஒழுக்கத்துடனும் பொதுஒழுக்கத்துக்கும், சொத்துக்கும் பங்கம் இல்லாமலும் நடந்துகொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். மன அளவில், மாற்றத்தின் அளவில் பெரும் புரட்சி இருக்கவேண்டும் என்பதுதான் அவரின் சிந்தனையே தவிர, வன்முறைதான் புரட்சி என்ற கொச்சைத்தனம் அவரிடம் என்றும் தலைகாட்டியதில்லை! 1948இல் இந்தி திணிக்கப்பட்டபோது தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தில் தொண்டர்களுக்குத் தந்தை பெரியார் விடுத்தவை பொதுத் தொண்டுக்கான இலக்கணமாகும். உயர் 1. தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது.