72 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா?" ("தமிழர் தலைவர்", பக்கம் 65) இந்தக் கேள்வி முறையிலே உள்ள நியாயத்தை யார் செவிமடுத்தாலும் சிந்திக்கத் தானே வேண்டும்? தஞ்சாவூரில் வாலிபர் சங்கத்துக்குத் தலைமை தாங்கிப்பேச வந்தார் தந்தை பெரியார். அங்குப் பேசிய தமிழன்பர் ஒருவர் பெரியார் இராமாயணத்தைக் குறை கூறுவது தவறு என்றும், கலையுணர்ச்சிக்காகவும் அதைப் போற்ற வேண்டும் என்றும் கூறினார். அதற்கு அந்தக் கூட்டத்திலேயே தந்தை பெரியார் பதில் கூறினார்: "நான் கலையுணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால் தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல் கம்பராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான். அவற்றில் உள்ள மூடநம்பிக்கைக்கும், தமிழர் இழிவுக்கும், ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவற்றை வைத்துக்கொண்டு எப்படி அவற்றைப் பாராட்ட முடியும்?" என்றார். நம் "கொசு வலை உபயோகிப்பதால், நாம் கொசுக்களுக்குத் துவேஷிகளாகி விடுவோமா? மூட்டைப் பூச்சி கடிக்காமலிருப்பதற்கு வீட்டை அடிக்கடி சுத்தஞ்செய்வதால், நாம் மூட்டைப் பூச்சி துரோகிகள் ஆகி விடுவோமா? இப்படிப்பட்ட துவேஷத்திற்கும், துரோகத்திற்கும் நாம் ஆளாகக்கூடாது என்று பயந்து பயந்து, பார்ப்பனர் தூஷணைகளுக்கு நடுங்கி நடுங்கி நம் குறைகளை வெளியில் எடுத்துச் சொல்வதற்கும், அவைகளை நிவர்த்திப்பதற்கும் இயலாத அவ்வளவு மோசமான பயங்காளிகளாக ஆகிவிட்டோம்" ("தமிழர் தலைவர்”, பக்கம் 162) இதில் தந்தை பெரியார் கூறும் உவமானங்கள் எவ்வளவு பொருத்தமானவை! அவர் பேச்சு முறை எதிரிகளையும் சிந்திக்க
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை