பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 என்று பதில் அளித்தார். இது தந்தை பெரியாரின் தர்க்கவாதத்துக்கான ஒரு எடுத்துக்காட்டாகும். 1928-ஆம் ஆண்டில் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் தன்மான இயக்கக் கொள்கைபற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அய்யர் ஒருவர் பெரியாரிடம் கேள்வி ஒன்றைக் கேட்டார். "நீங்கள் சாமியைக் கல் என்று சொன்னீர்களே! இது சரியா?' என்று கேட்டார். அதற்கு ஈ.வெ.ரா. உடனே: "ஆம்! வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள்!. காட்டுகிறேன்!" என்று மேஜை மேலிருந்த கைத்தடியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார் கோவில் பக்கம்; எல்லோரும் கைகொட்டி நகைத்தனர் மற்றொரு பார்ப்பனர்: "ஆனால், அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறது" என்றார். ஈ.வெ.ரா. - அப்படியானால், மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்குச் செய்த மந்திர உச்சாடனத்துக்கு உண்மையில் சக்தி இருக்குமானால், இதோ எதிரில் இருக்கும் உயிருள்ள மனிதருக்கும் கொஞ்சம் அதே மந்திரத்தை உபதேசம் செய்து, அவரை அந்தக் கல்லுச் சாமிக்குப் பக்கத்திலிருந்து பூசனை செய்யும்படியாகவாவது செய்யக்கூடாதா?" என்றார். முதலில் கேட்டவர்: 'இந்துமதம் என ஒன்று இல்லையென்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். நீங்களாவது ஒரு புதுமதம் சொல்லக்கூடாதா? என்றார். ஈ.வெ.ரா.: "நான் ஒரு புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும், சாமி என்றும், புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும், உண்மையாகவும், மற்ற மக்களிடத்தில் அன்பாகவும், சம பாவிப்பாகவும், பரோபகார எண்ணத்துடனும்